ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உள்ளாட்சி தேர்தலுக்காகவே மதுரைக்கு புதிய திட்டங்கள்: செல்லூர் ராஜூ விமர்சனம்

உள்ளாட்சி தேர்தலுக்காகவே மதுரைக்கு புதிய திட்டங்கள்: செல்லூர் ராஜூ விமர்சனம்

செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது, தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள், மக்களை நம்பியே அதிமுக தேர்தலை எதிர் கொள்கிறது என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காகவே மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளதாக  அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

  முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாளையோட்டி மதுரை அருள்தாஸ்புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக கட்சி கொடியேற்றி வைத்து இனிப்பு மற்றும் உணவுகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, "அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் நேற்று திறந்து வைத்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாலங்களை முதல்வர் தற்போது அறிவிப்பாக வெளியீட்டு உள்ளார்” என்று குறிப்பிட்டார்.

  மேலும்,  முதல்வர் அறிவித்த மேலக்கால் சாலையை அகலப்படுத்துவற்கு பதில் வைகை ஆற்றின் கரையோரம் சாலை அமைக்கலாம் என யோசனை தெரிவித்த அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காக மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளார் என்று விமர்சித்தார். மதுரைக்கான வளர்ச்சி திட்டங்களை தற்போதைய திமுக அமைச்சர்கள் அரசிடம் கேட்டு செயல்படுத்த வேண்டும் என்றும்  திமுக ஆட்சி காலத்தில் மதுரையில் முறையாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

  மதுரைக்கு முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி பெறப்பட உள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று தெரிவித்த செல்லூர் ராஜூ, எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது, தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள், மக்களை நம்பியே அதிமுக தேர்தலை எதிர் கொள்கிறது என குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க: மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

  Published by:Murugesh M
  First published:

  Tags: Election, MK Stalin, Sellur Raju