Home /News /tamil-nadu /

ஒரே நாடு ஒரே பதிவு நடைமுறை சாத்தியமில்லை- அமைச்சர் மூர்த்தி விளக்கம்

ஒரே நாடு ஒரே பதிவு நடைமுறை சாத்தியமில்லை- அமைச்சர் மூர்த்தி விளக்கம்

அமைச்சர் மூர்த்தி

அமைச்சர் மூர்த்தி

ஒரே நாடு ஒரே பத்திரப் பதிவு நடைமுறை சாத்தியமில்லை என்று வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பத்திரப்பதிவு துறையில் முறைகேடுகளை தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட சட்ட முன்வடிவுக்கு விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும், அது நடைமுறைக்கு வந்தால் இந்தியாவிற்கே முன்னுதாரணமான சட்டமாக இருக்கும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘முத்தரையர் சமுதாய மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ஆனையூர் பகுதியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ஒரே நாடு ஒரே பதிவு நடைமுறை சாத்தியம் அல்ல. பதிவு துறையில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 6 மாத காலம் ஆகி விட்டது.

சட்ட முன்வடிவில் சில விளக்கங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளோம். அதற்கு இன்னும் சில நாட்களில் ஒப்புதல் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது நடைமுறைக்கு வரும் போது தவறுகள் முழுமையாக குறையும். இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இந்த சட்டம் இருக்கும்.

சட்டம் அமலுக்கு வந்த பின்னர், சார் பதிவாளர்கள் தவறு நிரூபணம் ஆனால் 3-7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும். தவறான பதிவுகள் உறுதி செய்யப்பட்டால் உயர் அதிகாரிகளே ரத்து செய்ய முடியும். நில உரிமையாளர்கள் யாரையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

பல ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ் டி பங்கீடு பாக்கி இருக்கிறது. அதையும் டெல்லிக்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பெற உள்ளோம். பத்திரம் பதிவு செய்கையில் வழிகாட்டு மதிப்பை விடகுறைவாக பதிய கூடாது. மனை இடத்தை காலி இடமாக பதிந்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் பட்சத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆடுதுறை பேரூராட்சிக்கான மறைமுகத் தேர்தலை சுதந்திரமாக நடத்த பாதுகாப்பு வழங்குங்கள்- காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிவு துறையில் இந்த நிதி ஆண்டில் மட்டும் 13,500 கோடி ரூபாய் வரும் என எதிர்பார்த்து உள்ளோம். அந்த இலக்கை நிச்சயம் எட்டும் என்பதில் மாற்றமில்லை. பதிவுத்துறை வரலாற்றில் முதல்முறையாக அதிகமான வருவாய் பெறப்பட்டு உள்ளது.

வணிக வரி துறையில் இதுவரை 93,700 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. இது மார்ச் இறுதிக்குள் 1 லட்சம் கோடியாக இருக்கும். ஜி.எஸ் டி அமலானதற்கு பின்னால் அரசுக்கு அதிகமான வருவாயை முதல்முறையாக பெற்றுக் கொடுத்து உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published:

Tags: Registration

அடுத்த செய்தி