முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Madurai AIIMS : மதுரை எய்ம்ஸ்-ல் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Madurai AIIMS : மதுரை எய்ம்ஸ்-ல் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை பாலரெங்கபுரத்தில் அமைந்துள்ள கதிர்வீச்சு துறை மண்டல புற்றுநோய் மையத்தில் வெளிப்புற கோபால்ட்-60 வசதியை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கை துவங்கும் எனவும், விரைவில் மருத்துவமனை கட்டுமானம் குறித்த நல்ல செய்தி வரும் எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை பாலரெங்கபுரத்தில் அமைந்துள்ள கதிர்வீச்சு துறை மண்டல புற்றுநோய் மையத்தில் வெளிப்புற கோபால்ட்-60 வசதியை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

மேலும், தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விபத்து அவசர சிகிச்சை வளாகத்தில் எலும்பு வங்கியையும், முதுகுதண்டுவட காய படுக்கைப்புண் சிகிச்சை மையம் மற்றும் மாடித்தோட்ட வளாகத்தையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த (பாரா மெடிக்கல்) பட்டபடிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

இந்தாண்டு 64,900 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதில், 19 மருத்துவம் சரந்த பட்ட படிப்புகளுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் 2276 இடங்களும், சுய நிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13,832 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விரிவான விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் பேசுகையில், "மதுரையில் எலும்பு வங்கி துவங்கியது ஏழை நோயாளிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். மண்டல புற்று நோய் மையத்தில் அதிநவீன சிகிச்சையை பெறலாம். மண்டல புற்று நோய் மையம் மேம்படுத்த வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், நிதி நிலை அறிக்கையில் அறிவித்த படி 10 படுக்கைகள் அடங்கிய படுக்கை புண் வார்டு துவங்கப்பட்டு உள்ளது.

செயற்கை கால்களை தயாரிக்கும் மையமும் இங்கு துவங்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இதனை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் தமிழகம் அளவில் இன்று மதுரையில் செல்லூர் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் துவங்கப்பட உள்ளது. இது அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் செயல்படுத்த பட உள்ளது.

தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் முதன்முறையாக சித்தா பல்கலைகழகம் இந்த மாத இறுதியில் முதல்வரால் துவங்க உள்ளது. தமிழகம் முழுவதும் சேதமடைந்த ஹோமியோபதி, சித்தா மருத்துவ கட்டிடங்கள் விரைவில் சீரமைக்கப்படும்.

அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைகள் அனுப்பிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சட்ட ரீதியான நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்படும்.

உதகையில் தொடங்கியது உறைபனி பொழிவு… கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜனவரி 11 முதல் காப்பீட்டு திட்ட உச்ச வரம்பு அமலுக்கு வருகிறது. ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை கடுமையாக எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 98 நபருக்கு பாசிட்டிவ் இருந்தது. அவைகளை, தமிழகத்தில் மரபியல் ஆய்வு செய்ததில் 43 s gene drop இருந்தது. எனவே, அனைத்து மாதிரிகளும் புனே ஆய்வகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. 98 நபரும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அறிகுறிகள் இல்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் ஒரே கட்டுப்பாடுகள் உள்ளதால், பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை அறிகுறிகள் இருந்தால் மட்டுமே ஓமைக்ரான் சோதனை நடத்தப்படும்.

ராஜேந்திர பாலாஜி சினிமா பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று தப்பித்தார் - போலீசார் தகவல்

எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பல முறை ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளோம். நடப்பு கல்வி ஆண்டிலேயே 50 மாணவர்களை சேர்க்க ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது.

தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு முதல்வர் ஒப்புதலுடன் விரைவில் அறிவிக்கப்படும்.

மிக குறைவான தடுப்பூசி செலுத்திய மாவட்டத்தில் மதுரையும் ஒன்று. மாநில அளவில் 84%, மதுரையில் 77% நபரும் முதல் தவணை செலுத்தி உள்ளனர். மாநில அளவில் - 54%, மதுரையில் 41.82% நபரும் இரண்டாம் டோஸ் மட்டுமே செலுத்தப்பட்டு உள்ளது.

Also read... உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் விசாரணையை தொடங்கும் ஆறுமுகசாமி ஆணையம்

மதுரை எல்லாவற்றிலும் முன்னிலையில் உள்ள மாவட்டம். அது தடுப்பூசி செலுத்துவதிலும் முதன்மையாக வர வேண்டும். வரக்கூடிய இரண்டு வாரங்களிலும் சனி கிழமை அன்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருவதால் இறைச்சி உண்பவர்களையும், மது அருந்தும் நபர்களையும் கருத்தில் கொண்டு ஞாயிற்று கிழமை அன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

11 புதிய மருத்துவ கல்லூரிகளில் 1450 மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. எந்த கல்லூரி முழுமையாக கட்டப்பட்டு உள்ளது என்பதை ஆய்வு செய்ய உள்ளோம். அதன்படி பிரதமர் பங்கேற்கும் விழா நடைபெறும்" என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் பின்னர், செல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான யோகா பயிற்சி அளிக்கும் நடைமுறையையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.

First published:

Tags: AIIMS, Aiims Madurai, Ma subramanian