Home /News /tamil-nadu /

Breaking: மதுரைக்கு வருகிறது மெட்ரோ ரயில்? மகிழ்ச்சி செய்தி சொன்ன எம்.பி..

Breaking: மதுரைக்கு வருகிறது மெட்ரோ ரயில்? மகிழ்ச்சி செய்தி சொன்ன எம்.பி..

சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சாத்தியக் கூறு அறிக்கை மே 2022 இல் தயாராகி விடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வருவது தொடர்பாக, முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதுதொடர்பாக, மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கடந்த ஜனவரி 19-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்துள்ள பதிலில், மதுரைக்கு மெட்ரோ ரயில் கொண்டுவருவது தொடர்பாக ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    நான் 19.01.2022 அன்று மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் பற்றி எழுதி இருந்த கடிதத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஆர்.எம்.கிருஷ்ணன் கடித எண் CMRL /629/1/DFR for Madurai MRTS /2021/ 05.04.2021 தேதியிட்ட பதிலை அளித்துள்ளார்.



    "மதுரையில் மெட்ரோ வெகு விரைவு போக்குவரத்து திட்டம் பற்றிய உங்கள் 19.01.2022 கடிதம் தொடர்பாக இப் பதில் தரப்படுகிறது. மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய இரண்டாம் தட்டு நகரங்களுக்கு மெட்ரோ வெகு விரைவு போக்குவரத்து திட்டம் கொண்டு வருவதற்கான "சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை" க்கான அனுமதியை தமிழ்நாடு அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது.

    இதையும் படிங்க - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை - பெரம்பலூரில் மின்னல் தாக்கியதில் 2 இளைஞர்கள் பலி

    "மதுரையில் மெட்ரோ வெகு விரைவு போக்குவரத்து திட்டம் கொண்டு வருவதற்கான "சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை" தயாரிப்பதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே விடுக்கப்பட்டு அப்பணி "பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (கன்சல்டன்சி) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நடந்தேறி வருகிறது. இறுதி சாத்தியக் கூறு அறிக்கை மே 2022 இல் தயாராகி விடுமென எதிர்பார்க்கப்படுகிறது."

    இதையும் படிங்க - இந்தி மாநிலம் மட்டும் போதும் என்று அமித் ஷா நினைக்கிறாரா? மு.க.ஸ்டாலின்
     மதுரை மக்களுக்கு நல்ல செய்தி. விரைவில் இப்பணி மேற்கொள்ளப்பட என்னுடைய இடையறா முயற்சிகள் தொடரும்.
    இவ்வாறு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி