வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா - விடிய விடிய காத்திருந்து பிரியாணி வாங்கி சென்ற பக்தர்கள்!
வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா - விடிய விடிய காத்திருந்து பிரியாணி வாங்கி சென்ற பக்தர்கள்!
முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா
விழாவின் நிறைவாக 120 ஆடுகள், 300க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டன. பின்னர் 2,500 கிலோ அரிசியில் பிரியாணி சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சுடச்சுட வழங்கப்பட்டது.
திருமங்கலம் அருகே உள்ள முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து சுடச்சுட பிரியாணி வாங்கி சென்றனர்.
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் தை மற்றும் மாசி மாதங்களின் 2வது வெள்ளிக்கிழமையில் பிரியாணி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஜனவரி மாதத்தில் விழா நடைபெறவில்லை. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 87வது ஆண்டாக வெள்ளிக்கிழமை விழா நடைபெற்றது.
இதற்காக காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து தேங்காய், பழம், பூ தட்டு போன்றவை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
விழாவின் நிறைவாக 120 ஆடுகள், 300க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டன. பின்னர் 2,500 கிலோ அரிசியில் பிரியாணி சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சுடச்சுட வழங்கப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து வாங்கிச்சென்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.