மதுரை மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு நாளில் அவசியமின்றி வெளியே வரும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 157 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருந்தும் அவசியமின்றி வெளியே வருவது மதுரையில் தொடர்ந்து வருகிறது.
கோரிப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாகன சோதனை சாவடியில், அவசியமின்றி வெளியே வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி போலீசார் எச்சரித்தனர். அப்போது, தல்லாகுளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகானந்தம் குடுகுடுப்பை காரர் வேடம் அணிந்து வந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் படிக்க... Puducherry : புதுச்சேரி தற்காலிக சபாநாயகர் நாளை பதவியேற்பு
குடுகுடுப்பையை இசைத்த படியே... " ஜக்கம்மா சொல்றா தயவு செஞ்சு வெளியே வராதீங்க. கொரோனா தொற்றிக் கொள்ளும் வெளியே வராதீங்க. அவசியம் இல்லாம வெளியே வந்து போலீசாருக்கு தொந்தரவு கொடுக்காதீங்க. வீட்டில் இருங்க, விழித்து இருங்க, தனியே இருங்க. அரசின் முழு ஊரடங்கு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்..." என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
மேலும் “போலீசார் எவ்வளவோ முறை எச்சரித்து அறிவுறுத்தியும் சிலர் அவசியமின்றி வெளியே வந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு என்னால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறேன்” என்றார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona safety, CoronaVirus, Madurai