Home /News /tamil-nadu /

மழையால் வரத்து குறைவு... மதுரை சந்தையில் கிலோ ரூ. 4 ஆயிரத்திற்கு மல்லிப்பூ விற்பனை

மழையால் வரத்து குறைவு... மதுரை சந்தையில் கிலோ ரூ. 4 ஆயிரத்திற்கு மல்லிப்பூ விற்பனை

நாளை முகூர்த்த தினம் என்பதால் விலை இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

நாளை முகூர்த்த தினம் என்பதால் விலை இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

நாளை முகூர்த்த தினம் என்பதால் விலை இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தொடர் மழையால் வரத்து குறைந்ததன் காரணமாக மல்லிப்பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முகூர்த்த நாட்களில் கூட அதிகபட்சமாக ரூ. 2500யை தாண்டாத பூக்களின் விலை, தற்போது 4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    நேற்று வரை கிலோ மல்லி ரூ. 2,500க்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஒரே நாளில் ரூ. 1,500 உயர்ந்திருக்கிறது. நாளை முகூர்த்த தினம் என்பதால் விலை இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    விலை உயர்ந்தாலும், வாடிக்கையாளர்கள் விருப்பத்துடன் வழக்கத்தை விட குறைவான அளவில் பூவை வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது. வரத்து குறைந்ததும், தேவை அதிகரித்ததும்தான் பூக்கள் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் சில நாட்களில் பூக்கள் விலை கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்று அவர்கள் கூறினார்கள்.

    Also Read : தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

    இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையிலும் மல்லிப்பூவின் விலை உயர்ந்துள்ளது. நேற்று மல்லிகைப்பூ விலை அதிகமாக, அதாவது ஒரு கிலோ ரூ.3,500-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் இதே மல்லிகைப்பூ ரூ.1,800-க்கு விற்பனையானது. குமரி மாவட்ட வியாபாரிகள் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் தோவாளைக்கு வந்து பூக்களை வாங்கி செல்கிறார்கள்.

    Also Read : இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

    பனிப்பொழிவால் விளைச்சல் குறைந்ததுதான் மல்லிப்பூவின் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தோவாளை சந்தையில் மற்ற பூக்களின் விலை விபரம்...
    முல்லை ரூ.1,400, பிச்சி ரூ.,1,500, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.450, சம்பங்கி ரூ.200, வாடாமல்லி ரூ.100, துளசி ரூ.30, கோழிப்பூ ரூ.80, பச்சை ஒரு கட்டு ரூ.10, ரோஜா (100 எண்ணம்) ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.320, ஸ்டெம்பு ரோஸ் ஒரு கட்டு ரூ.400, மஞ்சள் கேந்தி ரூ.120, சிவப்பு கேந்தி ரூ.150, சிவந்தி (மஞ்சள்) ரூ.200, வெள்ளை சிவந்தி ரூ.220, கொழுந்து ரூ.150, மருக்கொழுந்து ரூ.170, தாமரை ஒரு எண்ணம் ரூ.20.
    Published by:Musthak
    First published:

    Tags: Kanniyakumari, Madurai

    அடுத்த செய்தி