Home /News /tamil-nadu /

எம்.ஜி.ஆர் வேடத்தில் வந்து மனுத்தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்!

எம்.ஜி.ஆர் வேடத்தில் வந்து மனுத்தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்!

எம்.ஜி.ஆர் வேடத்தில் மனுத்தாக்கல் செய்த மநீம வேட்பாளர்

எம்.ஜி.ஆர் வேடத்தில் மனுத்தாக்கல் செய்த மநீம வேட்பாளர்

Makkal Needhi Maiam: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் தொடர்ந்து பல்வேறு வேடமணிந்து வேட்புமனு தாக்கல் செய்து பலரின் கவனத்தை ஈர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
    மதுரை மாநகராட்சியில் எம்.ஜி.ஆர் வேடத்தில் வந்து மனுத்தாக்கல் செய்துளார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஒருவர்.

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறும் நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்களையும் அந்தந்த கட்சியினர் வெளியிட்டனர்.

    இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள மண்டல அலுவலகங்களில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் மும்முரமாக வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    குறிப்பாக அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் என பலர் வித்தியாசமான முறையில் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் 62 வது வார்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் பாட்சா என்பவர் எம்ஜிஆர் வேடமணிந்து மனுத்தாக்கல் செய்ய வந்தார்.

    Also read... 'ஜெய்பீம் படத்தால் நாங்கள் கௌரவிக்கப்படுகிறோம்' - முதல் முறையாக நரிக்குறவர் பெண் வேட்பு மனுதாக்கல்!

    அதைத்தொடர்ந்து, மதுரை மாநகராட்சி 94 வது வார்டு (திருநகர்) மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் சத்யா (32) நீதி தேவதை போல கண்களில் கருப்பு துணி கட்டியும், கையில் தராசு எந்தியும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் தொடர்ந்து பல்வேறு வேடமணிந்து வேட்புமனு தாக்கல் செய்து பலரின் கவனத்தை ஈர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    -செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன்.

     
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Local Body Election 2022, Madurai, Makkal Needhi Maiam

    அடுத்த செய்தி