Home /News /tamil-nadu /

மயானத்தில் மாந்திரீக மண்டை ஓடு.. திருமங்கலம் பகுதி மக்கள் அச்சம்

மயானத்தில் மாந்திரீக மண்டை ஓடு.. திருமங்கலம் பகுதி மக்கள் அச்சம்

திருமங்கலம்

திருமங்கலம்

மயானத்தில் மாந்திரீக மண்டை ஓடு கிடந்ததால் திருமங்கலம் அருகே பரபரப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    திருமங்கலம் அருகே மயானத்தில் மாந்திரீகம் செய்யப்பட்ட மண்டைஓடு கிடந்ததால் பரபரப்பு நிலவியது மண்டை ஓட்டை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். 

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட புல்லமுத்தூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி அம்மாள் என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை கிராம பொது மயானத்தில் நடை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர்.இந்நிலையில் மயானத்தில் இறந்தவர் உடலை எரியூட்டும் இடத்தை மயான வெட்டியான் சுத்தம் செய்தபோது எரியூட்டும் இடத்தில் சாக்கு ஒன்று கிடந்ததைக் கண்டு சாக்கை எடுத்து திறந்து பார்த்த போது  சாக்குப்பையின் உள்ளே மனித மண்டை ஓடு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக கிராம மக்களுக்கு தகவல் அளித்தார்.

    Also Read:  திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கு - திருச்சியில் இருவரை பிடித்து விசாரணை

    அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மயானத்திற்கு வந்த கிராம மக்கள் சாக்குப் பையின் உள்ளே மண்டை ஓடு, சேவல் தலை, மாவு போன்ற பொருள் ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தகவலறிந்து வந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சாக்குப்பையை பிரித்து பார்த்து உள்ளிருந்த பொருட்களை ஆய்வு செய்ய தடயவியல்  நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்ததில் யாரோ மர்ம நபர்கள் மாந்திரீகம் செய்து மண்டை ஓடு மற்றும் மாந்திரீகம் செய்த பூஜை பொருட்களை சாக்குப்பைக்குள் போட்டு சுடுகாட்டில் புதைத்து வைத்தது தெரியவந்தது.

    Also Read: 2 குழந்தைகளை நீரில் மூழ்கவைத்து கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை.. கன்னியாகுமரியில் பரபரப்பு

    இதனையடுத்து போலீசார் கைப்பற்றிய மண்டை ஓடு மற்றும் மாந்திரீக பொருட்களை மீண்டும் சாக்கில் போட்டு குழி தோண்டி புதைத்தனர். மேலும் மாந்திரீக பூஜை செய்து மண்டை ஓட்டை மயானத்தில் புதைத்து சென்றவர்கள் யார்? எதற்காக பூஜை செய்தனர் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இறந்தவர் உடலை எரியூட்டும் இடத்தில் மாந்திரீகம் செய்யப்பட்ட மண்டை ஓடு கிடந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பை உண்டாக்கியது.

    செய்தியாளர் : சிவக்குமார் ( திருமங்கலம்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Madurai, Tamilnadu, Thirumangalam

    அடுத்த செய்தி