• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வடிவேலு ஸ்டைலில் பேருந்தின் மேற்கூரையில் இளைஞர் பயணம்

வடிவேலு ஸ்டைலில் பேருந்தின் மேற்கூரையில் இளைஞர் பயணம்

மதுரை

மதுரை

மேலூரில் இருந்து செக்கடி நோக்கி சென்ற பேருந்தில் ஓட்டுநருக்கு தெரியாமல், 25 வயதான இளைஞர் ஒருவர் பேருந்தின் மேற்கூரையில் நின்றபடி பயணம் செய்துள்ளார்.

  • Share this:
    இந்த பஸ் இல்லை.. தமிழ்நாட்டுல எந்த பஸ்ல ஏறுனாலும்  எங்க அண்ணன் கம்பிய பிடிக்கமாட்டார்.. வடிவேலு ஸ்டைலில் பேருந்தில் இருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுவதும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஓட்டாதது போல் எழுந்து நடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு தன் கூட்டாளியுடன் பயணிப்பார். பேருந்தில் இருக்கைகள் காலியாக இருந்தும் வடிவேலு நின்றுக்கொண்டே பயணிப்பார். ஏன்  உங்க அண்ணன் (நடிகர் வடிவேலு)  பஸ்ல கம்பியை பிடிக்க மாட்டாரோ எனகண்டெக்டர் கேட்பார். இந்த பஸ் இல்லை.. தமிழ்நாட்டுல எந்த பஸ்ல ஏறுனாலும் எங்க அண்ணன் கம்பிய பிடிக்க மாட்டார். இவ்ளோ ஏன் அரைபாடி லாரில ஏறுனாக்கூட ஆணி அடிச்ச மாறி நடுவுல நின்னு எதையும் பிடிக்காம வருவாருயா எங்க அண்ணன் எனக் கூறுவார்.

    உடனே கண்டக்டர் விசில் அடிப்பார். டிரைவர் பிரேக் போட்டு பஸ்ஸை நிறுத்த பேருந்தில் நின்றுக்கொண்டிருந்த வடிவேலு டைவ் அடித்தபடியே பேருந்தில் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியில் போய் விழுவார். இதுபோல் ஒரு சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. என்ன அந்த இளைஞர் வடிவேலுவை மிஞ்சும் அளவுக்கு பேருந்தின் மேற்கூரையில் பயணித்துள்ளார்.  இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மேலூரில் இருந்து செக்கடி நோக்கி சென்ற பேருந்தில் ஓட்டுநருக்கு தெரியாமல், 25 வயதான இளைஞர் ஒருவர் பேருந்தின் மேற்கூரையில் நின்றுள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் சத்தம் போடுவதை பார்த்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். ஆனால், மேற்கூரையில் நடந்து வந்த இளைஞர், பிரேக் போட்டதும் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இருப்பினும், எதுவும் நடக்காதது போல் எழுந்து சென்றார்.விசாரணையில், அவர் சென்னகரம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

    ஓடும் பேருந்தில் இளைஞர் மேற்கூரையில் நடந்து செல்வதும். டிரைவர் பிரேக் போட்டதும் கண்ணாடி வழியாக சரிந்துக்கொண்டே கீழே விழுவதும். கீழே விழுந்தும் எதுவும் நடக்காதது போல் எழுந்து நடந்து செல்லும் காட்சிகளை பொதுமக்கள் வீடியோவாக படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: