• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜல்லிக்கட்டு மாடு முட்டியதால் காயம் - நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்த இளைஞர்!

ஜல்லிக்கட்டு மாடு முட்டியதால் காயம் - நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்த இளைஞர்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ம்ந்தை வீரன் தனது மாட்டிற்கு உணவு வைத்துக் கொண்டிருந்த போது மாடு முட்டியதில் கீழே விழுந்தவரின், இடது கனுக்காலில் மாடு அதன் கொம்புகளால் குத்தியதில் கால் சதை கிழிந்துள்ளது

  • Share this:
மதுரையில் வளர்ப்பு ஜல்லிக்கட்டு மாடு முட்டியதால் ஏற்பட்ட காயத்தில் உருவான பூஞ்சை தொற்று காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மானகிரி பகுதியை சேர்ந்த 38 வயது மந்தை வீரன் என்பவர் ஜல்லிக்கட்டு மாடு வளர்த்து, பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்றவர். கடந்த ஜூன் மாதம் அவருடைய மாட்டிற்கு உணவு வைத்துக் கொண்டிருந்த போது மாடு முட்டியதில் கீழே விழுந்தவரின், இடது கனுக்காலில் மாடு அதன் கொம்புகளால் குத்தியதில் கால் சதை கிழிந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

மேலும் படிக்க: ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி!


பின் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது காலில் தையல் போட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு பின்னர் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டதால், அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை செய்துள்ளனர். அப்போது, காலில் காயம் ஏற்பட்ட இடத்தில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு அது இரத்தத்தில் கலந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதையும் படிங்க: மதுரையில் வளர்ப்பு நாய் திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் திருடியவர் கைது; நாய் மீட்பு!


அதனால் கடந்த 19ம் தேதி இடது கால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பூஞ்சை தொற்று நுரையீரல் வரை பரவிய நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

மந்தை வீரனுக்கு  ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த நிலையில், காயத்திற்காக மேற்கொண்ட சிகிச்சைகள் மேலும் எதிர்ப்பு சக்தி குறைந்து நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறிய குடும்பத்தினர், மாடு முட்டியதற்கும், அவரது மரணத்திற்கும் தொடர்பில்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: