Home /News /tamil-nadu /

ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக மதுரையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக மதுரையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Madurai Hijab Row | மதுரை மாவட்டத்தில் அனைத்து  கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னேடுப்போம் என போராட்டத்தில்  பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
    மதுரை வக்பு வாரிய கல்லூரி மாணவர்கள் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக கல்லூரி வளாகத்தில உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கர்நாடக நீதிமன்றம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹிஜாப் குறித்த தீர்ப்பை வழங்கியது. அதில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய  தடை விதித்தது செல்லும் என தீர்ப்பு வழங்கி இருந்தது. இது இஸ்லாமிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கர்நடக நீதிமன்றத்தின் ஹிஜாப் தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை கே.கே நகர் பகுதியில் அமைந்துள்ள வக்பு வாரிய கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் 200 பேர் திடீரென கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஹிஜாப் தடை சட்டத்தை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

    Also read... ஓபிஎஸ்-க்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு

    போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தனி மனிதர் அடிப்படை உரிமைகளை பறிக்கக் கூடிய உங்கள் தீர்ப்பை ஏற்க மாட்டோம், ஹிஜாப் எனது உரிமை, எனது கண்ணியம் இதனை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி, மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

    மேலும்,  மதுரை மாவட்டத்தில் அனைத்து  கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னேடுப்போம் என போராட்டத்தில்  பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

    - செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி