• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரையில் தண்ணீர் தந்த அதிசய மரம் – மாநகராட்சி கொடுத்த விளக்கம்

மதுரையில் தண்ணீர் தந்த அதிசய மரம் – மாநகராட்சி கொடுத்த விளக்கம்

மரத்தில் வந்த தண்ணீர்

மரத்தில் வந்த தண்ணீர்

மரத்தில் இருந்து சுமார் 45 நிமிடங்கள் தண்ணீர் பிய்ச்சி அடித்தது.சிறிது  நேரத்தில் மரத்தில் இருந்து வந்த தண்ணீர் நின்றுவிட்டது

  • Share this:
    மதுரையில் மரத்தில் இருந்து தண்ணீர் வந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள வேல்முருகன் நகரில் சாலையோரம் ஒரு வாகை மரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து நேற்று திடீரென தண்ணீர் வரத் தொடங்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள் வீட்டில் இருந்த காலிகுடங்கள், வாலிகளை கொண்டு வந்த மரத்தில் இருந்து கொட்டும் தண்ணீரை பிடித்து சென்றனர். மரத்தில் இருந்து தண்ணீர்  வரும் காட்சியை ஏராளமான வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பார்வையிட்டு சென்றனர். சிலர் இந்தக் காட்சியை வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டனர். இதன்காரணமாக வாகை மரம் வைரல் கண்டெண்ட் ஆனது.

    வாகை மரத்தை பார்க்க மக்கள் குவியத் தொடங்கினர். மரத்தில் இருந்து சுமார் 45 நிமிடங்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தது.சிறிது  நேரத்தில் மரத்தில் இருந்து வந்த தண்ணீர் நின்றுவிட்டது. வாகை மரம் குறித்த வீடியோக்களும், மீம்களும் இணையத்தில் வைரலாகின. இதுகுறித்து கருத்து தெரிவித்த இயற்கை ஆர்வலர்கள் மழையின் காரணமாக மரத்தில் வெற்றிடத்தில் நீர் தேங்கி இருக்கலாம். அந்த நீர் கூட இவ்வாறு வெளியேறலாம் என்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வாகை மரத்தில் தண்ணீர் வந்தது குறித்து விளக்கமளித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், “மரத்தின் கீழே செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அதிக அழுத்தத்தின் பேரில் மரத்தில் இருந்து தண்ணீர் வந்துள்ளது” என்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: