• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு.. சடலத்துடன் போராட்டம் நடத்திய பொதுமக்கள் - அதிகாரிகள் தலையீட்டால் ஆக்கிரமிப்பு அகற்றம்

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு.. சடலத்துடன் போராட்டம் நடத்திய பொதுமக்கள் - அதிகாரிகள் தலையீட்டால் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை போராட்டம்

மதுரை போராட்டம்

திருமங்கலம் அருகே ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்ததாக பிணத்துடன் உள்ளிருப்பு போராட்டம்.

  • Share this:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆதிதிராவிடர் காலனிக்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்ததால் பாதையை ஒதுக்கிக் கொடுக்க பல போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் பிணத்துடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்

திருமங்கலம் அருகே நடுக்கோட்டை கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் கடந்த 40 வருடங்களாக பழைய ஆதிதிராவிடர் காலனி மற்றும் கடந்த 20 வருடங்களாக புதிய ஆதிதிராவிடர் காலனி என இரு தெருவுக்கும் பொது பாதை அமைத்து கொடுக்காததால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருந்துள்ளனர். மேலும் ஆதிதிராவிட காலனியில் துக்க நிகழ்ச்சி நடந்தால் பிரேதத்தை எடுத்துச் செல்ல கூட பாதை இல்லை என்ற சூழல் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பலமுறை  அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பாதை வழியாக ஊருக்குள் வருவதற்கு மாற்று சமுதாயத்தினர் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் இன்று உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். பிரேதத்தை பொதுப்பாதை வழியாக எடுத்து செல்ல கேட்டபோது மாற்று சமூகத்தினர் ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது என தெரிவித்துள்ளனர் ஆதலால் பொதுப்பாதை இல்லாமல் இருந்ததால் ஆதி திராவிட காலனி மக்கள் பிணத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் மற்றும் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் இதனைத்தொடர்ந்து பொதுப் பாதையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பாதையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில்  பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை ஏற்படுத்தி கொடுத்ததை அடுத்து இறந்தவர் உடல் அப்பாதையில் எடுத்துச் செல்லப் பட்டது.

செய்தியாளர் : சிவக்குமார்



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: