முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருமங்கலம் போக்குவரத்து பணிமனையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஊழியர்கள் அச்சம்

திருமங்கலம் போக்குவரத்து பணிமனையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஊழியர்கள் அச்சம்

கொரோனா

கொரோனா

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் கொரோனா தொடர்ந்து பரவி வருவதால்  ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்

  • 1-MIN READ
  • Last Updated :

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் கொரோனா தொடர்ந்து பரவி வருவதால்  ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.  இதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இயங்கிவரும் அரசு போக்குவரத்து பணிமனையில் தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் 91 பேருந்துகள் நாளொன்றுக்கு இயக்கப்படுகின்றன.   ஓட்டுனர் மற்றும் நடத்துனர் என 200க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.  ஓட்டுனர் ,நடத்துனர்  ஆகியோர் திருமங்கலம் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து  இருந்து பணிக்கு வருவதால் அவர்கள்  தங்கி பணியாற்றுவதற்கு அரசு போக்குவரத்து பணிமனையில் ஓய்வு எடுக்கும் அறை உள்ளது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றாக ஓய்வெடுத்து வருவதாலும் ஒரே கழிப்பறையை உபயோகப்படுத்துவதாலும் கொரோனா பரவும் சூழல் நிலவுகிறது. மேலும் பேருந்து ஓட்டிச் செல்லும்போது பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்கப்படாததால் கொரோனா பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள்  வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருமங்கலம் போக்கு வரத்து பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்த  மீனாட்சிபுரத்தை சேர்ந்த பாலமுருகன்  என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

மேலும் படிக்க.. நகையை விற்று மருத்துவமனைக்கு மின்விசிறி வழங்கிய தம்பதி

இங்கு பணியாற்றி வரும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது .போக்குவரத்து நிர்வாகம்  உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அரசு போக்குவரத்து பணிமனை கொரோனா  பரவல் மையமாக மாறும் என ஊழியர்கள்  அச்சம் தெரிவிக்கின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bus, Corona, Madurai, Thirumangalam