சார்ஜ் போட்டபடி பேச்சு: மதுரையில் செல்போன் வெடித்து +2 மாணவன் உயிரிழப்பு!

மாதிரிப் புகைப்படம்

தினேஷ் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார்,  செல்போனில் அழைப்பு வரவே, சார்ஜரை எடுக்காமலே தினேஷ் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். , எதிர்பாராத விதமாக செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது

  • Share this:
மேலூர் அருகே மழையின் போது, சார்ஜ் போட்டு செல்போன் பேசிய +2 மாணவர் செல்போன் வெடித்து உயிரிழந்தார்.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிய நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொட்டாம்பட்டி, மேலவளவு, கீழவளவு, அழகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில்,  ஆலம்பட்டியைச் சேர்ந்த சேதுராமலிங்கம் என்பவரது மகன் தினேஷ். இவர் மேலவளவு அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வருகிறார். நேற்று மேலவளவு, உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது,  தினேஷ் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார்,  செல்போனில் அழைப்பு வரவே, சார்ஜரை எடுக்காமலே தினேஷ் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.  எதிர்பாராத விதமாக செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் தலையில் பலத்தகாயம் ஏற்பட்ட தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலவளவு காவல்துறையினர் தினேஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் வெடித்து மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க.. மாநில வளர்ச்சிக் குழு துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமனம்..

சார்ஜ் போட்டபடி செல்போனை பயன்படுத்துவது ஆபத்தானது என மருத்துவர்களும், ஆய்வாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: