Home /News /tamil-nadu /

அரிசி ஆலைகளால் கண்பார்வை, ஆஸ்துமா பாதிப்பு: மதுரை சூசைப்பர் பகுதி மக்கள் வேதனை

அரிசி ஆலைகளால் கண்பார்வை, ஆஸ்துமா பாதிப்பு: மதுரை சூசைப்பர் பகுதி மக்கள் வேதனை

அரிசி ஆலைகள்

அரிசி ஆலைகள்

மதுரை சூசையப்பர் புரம் பகுதி மக்கள் அந்தப் பகுதியில் செயல்படும் அரிசி ஆலையால் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிவருகின்றனர்.

மதுரை சிந்தாமணி சாலையில் உள்ள சூசையப்பர் புரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட வேலை செய்து, தங்களுடைய வாழ்கையை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் வசிக்கும் பகுதியின் அருகே 10-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கிக் கொண்டு வருகின்றது. இந்த ஆலைகளில், நவீன இயந்திரங்கள் மூலம் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு வருவதால், அதில் இருந்து வரும் உமி, போன்ற தூசிகள் பறந்து வந்து தங்களுடைய வீடுகளில் குப்பையாக அடைவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, தாங்கள் உண்ணும் உணவு, தண்ணீர் போன்றவைகளில் தூசி அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதை உண்பதால் தங்களுக்கு கண் பார்வை, ஆஸ்துமா போன்ற போன்ற நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்னர்.
இது குறித்து, தங்களுடைய தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஆணையர், முதலமைச்சர் ஆகியோரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அங்கு வசித்து வரும் சகாயம் கூறுகையில், ’இந்த பகுதியில் கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம், இந்த பகுதியை சுற்றி 10 க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இரவு, பகலாக இயங்கிக் கொண்டிருக்கும், இந்த ஆலைகளில் அரிசி உற்பத்தி செய்வதற்காக எரிக்கப்படும் விரகுகளாளும், உமி போன்ற தூசிகளிலாலும், தங்களுடைய வீடுகளில் படிவதால் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

இப்படி தூசிகள் படிவதால் கண் பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தானும் கண் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், இது சம்பந்தமாக அரிசி ஆலை உரிமையாளர்களிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு தடுப்பும் அமைக்கவில்லை என்றும், இது சம்பந்தமாக கீரைத்துறை காவல் நிலையம், ஆட்சியர் அலுவலகம், என முதலமைச்சர் வரை புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், மேலும் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில், தங்கள் பகுதியில் உள்ள மக்களை திரட்டி பஸ் மறியல் செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

மேலும், அந்த பகுதியில் வசிக்கும் வேதா சுரேஷ் பேசுகையில், ’அடித்தட்டு மக்கள் மட்டும் தன் இங்கு வசித்து வருகிறார்கள். அருகிலிருக்கும், கீரைத்துறை மயானம் கூட மின் மயானமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அதன் அருகிலிருக்கும் அரிசி ஆலைகளில், விறகு கட்டைகளைக் கொண்டு அரிசியை உற்பத்தி செய்து அதிக லாபத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். சில, நாட்களுக்கு முன் இந்த அரிசி ஆலைகள் அனைத்தும் பனையூர் பகுதியில் இடமாற்றம் செய்ய பேசி வந்ததாகவும், அப்படி இடமாற்றம் செய்தால் தங்களுக்கு நன்றாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இது குறித்து மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதனிடம் கேட்டபொழுது, ‘இது சம்பந்தமாக தங்களுக்கு எதும் புகார் வரவில்லை" என்று தெரிவித்தார். மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதற்கு "இது தொடர்பாக தங்களுக்கு புகார் வரவில்லை என்றும் தெரிவித்தனர்.

இப்பிரச்சனைகளில் இருந்து தங்களுக்கு தீர்வு கிடைக்க, அரசு வழிவகுக்குமா என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள் அப்பகுதி வாசிகள்.

செய்தியாளர்: ஹரி கிருஷ்ணன்
Published by:Karthick S
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி