அமமுக கூடாரமே காலியாகிவிட்டது: ஆர்.பி. உதயகுமார் கிண்டல்!

ஆர்பி உதயகுமார்

சட்டமன்ற தேர்தலில் 43 தொகுதிகளில் 29 தொகுதிகள் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக வெற்றியை நழுவ விட்டதாகவும் தி.நகர், தென்காசி,காட்பாடி உள்ளிட்ட தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே அதிமுக வெற்றியை நழுவ விட்டதாகவும் பேசினார்

  • Share this:
    அமமுக என்ற வீடு காலியாகிவிட்டதாகவும் அங்கிருந்து வருபவர்களை அதிமுகவினர்  சிவப்புக் கம்பளம் விரித்து  வரவேற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். 

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவில் வளாகத்தில் மதுரை மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஜெ.பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய அவர்,   நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 43 தொகுதிகளில் 29 தொகுதிகள் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக வெற்றியை நழுவ விட்டதாகவும் தி.நகர், தென்காசி,காட்பாடி உள்ளிட்ட தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே அதிமுக வெற்றியை நழுவ விட்டதாகவும் பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் பேசிய அவர்,  நாற்பத்தி மூன்று தொகுதிகளையும் சேர்த்து ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று திமுக வெற்றி பெற்றிருக்கிறார்கள். கட்சியினர் சோர்வடையாமல் உழைத்து ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இருந்தால் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி அமர்ந்திருப்பார் என குறிப்பிட்டார்.

    மேலும் படிக்க: தரிசனம் மட்டுமே, உட்கார அனுமதியில்லை.. பக்தர்களுக்கான நெறிமுறைகள் வெளியீடு..

    அமமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்  பழனியப்பன், திமுகவில் இணைந்ததையடுத்து அமமுக என்ற கூடாரமே காலியாகிவிட்டதாக உதயகுமார் தெரிவித்தார்.  பழனியப்பன் அதிமுகவில் தான் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் எதற்காக திமுகவில் சேர்ந்தார் என்பது தெரியவில்லை என்றும் கூறிய உதயகுமார், அமமுகவில் இருந்து  விலகி அதிமுகவில் சேருவதற்காக வந்தால் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து அதிமுக தொண்டர்கள் வரவேற்புக் கொடுக்க வேண்டுமென பேசினார்.

     

    செய்தியாளர்:  சிவக்குமார்
    Published by:Murugesh M
    First published: