முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஸ்ட்ரெச்சர்; மதுரை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு

ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஸ்ட்ரெச்சர்; மதுரை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு

ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஸ்ட்ரெச்சர்

ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஸ்ட்ரெச்சர்

இதன்மூலம் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்க எவ்வளவு நேரமானாலும் ஆக்சிஜன் தடையின்றி கொடுக்க முடியும். ரூ.55,000 மதிப்பிலான பொருட்களை கொண்டு, 3 நாட்களில் இதை வடிவமைத்து உள்ளோம்" என்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மதுரை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய 5 ஸ்ட்ரெச்சர்களை உருவாக்கி அரசு மருத்துவமனைக்கு அர்ப்பணித்து உள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி சுவாச சிக்கலுடன் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் உடனே படுக்கைகள் கிடைப்பதில்லை. படுக்கைகள் கிடைக்கும் வரை அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதற்கு ஏதுவாக, ஏற்கனவே சில தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய பேருந்துகளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அர்ப்பணித்து உள்ளனர்.

ஆனால், பேருந்துகளில் உள்ள நோயாளிகளை கூடிய விரைவில் படுக்கைகளுக்கு இடம் மாற்றியாக வேண்டும்.

இந்த நடைமுறையை விடவும் கூடுதல் வசதியை சாத்தியப்படுத்தும் வகையிலான ஸ்ட்ரெச்சர்களை மதுரை அருகேயுள்ள பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். மெக்கானிக்கல் துறையை சேர்ந்த உதவி பேராசிரியர் பொன்வேல் முருகன் வழிகாட்டுதலுடன் மோகன், வெற்றி மணிகண்டன், தன பிரகாஷ், போஸ் ஆகிய 4 மாணவர்கள் சேர்ந்து இந்த ஸ்ட்ரெச்சர்களை உருவாக்கி உள்ளனர்.

அவர்கள் கூறுகையில், "ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளோம். இந்த வகை ஸ்ட்ரெச்சர்களில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வகை ஆக்சிஜன் சிலிண்டர்களை படுக்கைக்கு கீழேயே வைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்க எவ்வளவு நேரமானாலும் ஆக்சிஜன் தடையின்றி கொடுக்க முடியும். 55,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொண்டு, 3 நாட்களில் இதை வடிவமைத்து உள்ளோம்" என்றனர்.

இந்த ஸ்ட்ரெச்சர்கள் உடன் சேர்த்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிபிஇ கிட், மாஸ்க், கையுறைகளையும் சேர்த்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அர்ப்பணித்து உள்ளனர்.மதுரை ஆட்சியர் அனீஷ் சேகரிடம் கல்லூரியின் நிர்வாக மேலாளர் வரதராஜன், முதல்வர் ராஜா ஆகியோர் இந்த பொருட்களை ஒப்படைத்தனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Madurai, Oxygen, Oxygen cylinder