Home /News /tamil-nadu /

மதுரையில் தடுப்பூசி செலுத்த நாளை முதல் முன்பதிவு!

மதுரையில் தடுப்பூசி செலுத்த நாளை முதல் முன்பதிவு!

தடுப்பூசிக்கு முன்பதிவு

தடுப்பூசிக்கு முன்பதிவு

இந்த மையத்தில் மட்டும்  இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 72,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும், மொத்தமாக தினமும் 1500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  சமூக இடைவெளி இன்றி மக்கள் கூடுவதை தவிர்க்க முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேல் அறிவித்துள்ளார்

மேலும் படிக்கவும் ...
    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஜூன் 2 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து பொதுமக்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி முகாமை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசிப் போட்டுவரும் அதேவேளையில், ஒருசில இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த திங்கள் கிழமை முதல் 18-44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, இந்த மையத்தில் அதிகமான மக்கள் குவிந்தனர்.

    இந்த மையத்தில் மட்டும்  இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 72,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும், மொத்தமாக தினமும் 1500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  சமூக இடைவெளி இன்றி மக்கள் கூடுவதை தவிர்க்க முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேல் அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க.. ஊரடங்கிலும் பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரியும் இளைஞர்கள்..

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் Covid Free Madurai என்ற அமைப்பும் இணைந்து, ஜூன் 2 ஆம் தேதி முதல் முன்பதிவு நடைமுறையை அமல்படுத்த உள்ளது.இதன் மூலம் 18-44 வயதினரும், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களும் 7823995550 என்ற உதவி எண்ணில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அப்போது, ஊசி வகை மற்றும் தவணைக்கான தேதி, நேரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் படிக்க..‘ ஆஸ்பத்திரிக்கு இலவசம்’- ரியல் மாணிக்கமாக வாழும் மதுரை ஆட்டோகாரர்..

    பதிவு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட அலைபேசி எண்ணிற்கு தேதி மற்றும் நேரம் குறித்த எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். அதனை காண்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:வெற்றி-மதுரை

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona Vaccine, Madurai, Rajaji Govt Hospital

    அடுத்த செய்தி