• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரையில் குடும்பப் பெண்களை மூளைச் சலவை செய்து பாலியல் தொழில் - 4 பேர் கைது

மதுரையில் குடும்பப் பெண்களை மூளைச் சலவை செய்து பாலியல் தொழில் - 4 பேர் கைது

கொல்கத்தா சோனாகச்சி பகுதி - பாலியல் தொழிலாளர்கள் - கோப்பு படம்  (Salvacampillo / Shutterstock.com)

கொல்கத்தா சோனாகச்சி பகுதி - பாலியல் தொழிலாளர்கள் - கோப்பு படம் (Salvacampillo / Shutterstock.com)

மதுரையில் வருமானம் இல்லாமல் தவித்த குடும்ப பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இடைத்தரகர் மற்றும் 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
கொரோனா பெருந்தொற்று காலம் ஏற்படுத்திய தாக்கத்தால், வருமானம் இன்றி தவித்து வந்த குடும்ப பெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு பொறுப்பு காவல் ஆய்வாளர் ஹேமமாலாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வடக்குமாசிவீதியை சேர்ந்த இடைத்தரகர் பாண்டியராஜாவிடம் வாடிக்கையாளர் போல் போலீசார் பேசினர். அப்போது அந்த இடைத்தரகர் குருவிக்காரன் சாலை பகுதியில்  உள்ள ஒரு வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படி போலீசார் அங்கு சென்று பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர். இதைதொடர்ந்து இடைத்தரகர் பாண்டியராஜா, சத்துணவு பணியாளர் குணசேகரன் மற்றும் 2 பெண்களை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.

செல்லுார், தபால்தந்தி நகர், அவனியாபுரம், வில்லாபுரம் என பல்வேறு பகுதியிலும் வறுமையில் இருக்கும் குடும்ப பெண்களை குறிவைத்து அவர்களிடம் முதலில் கடனாக சுமார் 5,000 ரூபாய் வரை கொடுத்து, பின்னர் அந்த கடனை அடைக்கும் பொருட்டு அவர்களை மூலச்சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளியுள்ளனர்.

மேலும், இத்தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டுவரும் பெண்கள் மூலம் புதிதாக, சில குடும்ப பெண்களையும் மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் தள்ளியுள்ளதும் போலீசார் விசாரணையில்  தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தொழிலில் புரோக்கர்களாக செயல்பட்ட மதிச்சியம் குணசேகரன், பாண்டியராஜா ஆகியோர் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில், தம்பதிகள் போல் நடித்து வாடகைக்கு வீடு எடுத்து இத்தொழிலை செய்து வந்துள்ளனர். இதில் இடைத்தரகராக செயல்பட்ட பாண்டியராஜா மீது ஏற்கனவே அண்ணாநகர் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

(முகப்பு படமாக பயன்படுத்தப்பட்டு இருப்பது மாதிரி படம்)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: