முகநூல் மூலம் நூதன மோசடி: ரூ. 50 ஆயிரத்தை இழந்த மதுரை நபர்!

மாதிரிப் படம்

கடன் கிடைக்கும் என்ற ஆசையில் அந்த தொலைப்பேசி எண்ணுக்கு குமரேசன் ரூ.53,100 ரூபாய் அனுப்பியுள்ளார்.அதன் பிறகு அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து குமரேசன் அதிர்ச்சியடைந்தார்.

 • Share this:
  மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் கடனுக்கு விண்ணப்பித்த நிலையில், அவரிடம் இருந்து ரூ.53 ஆயிரத்தை ஏமாற்றிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.

  மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியை சேர்ந்தவர் குமரேஷ். இவர் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என எண்ணி ஆன்லைனில் கடன் வழங்கும் நிறுவனங்களை முகநூல் மூலம் அணுகியுள்ளார். அப்போது கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் கிடைத்த தொலைப்பேசி எண்ணை தொடர்புகொண்டு குமரேஷ்பேசியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதை எண்ணில் தொடர்பு கொண்ட போது செல்போன் எண் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. பின்னர் குமரேஷ் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர்கள் வங்கியிலிருந்து பேசுவதாகவும் அவருக்கு ரூ.2 லட்சம் கடன் வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும்,  உடனடியாக ரூ.53,100 ரூபாயை செயலி மூலம் அனுப்ப சொல்லியுள்ளனர்.

  மேலும் படிக்க: பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாததால் மகள்களுக்கு நேர்ந்த கொடுமை!


  குமரேசும் கடன் கிடைக்கும் என்ற ஆசையில் அந்த தொலைப்பேசி எண்ணுக்கு பணம் அனுப்பும் செயலி  மூலம் ரூ.53,100 ரூபாய் அனுப்பியுள்ளார்.அதன் பிறகு அந்த குறிப்பிட்ட செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும், லோன் தொகையும் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமரேஷ் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

  மதுரை சைபர்கிரைம் போலீசார் இந்த புகாரை பெற்று கொண்டு குற்றவாளிகளை தேடினர்.குறிப்பிட்ட அந்த  நம்பரை தொடர்பு கொண்டு செல்போன் சிக்னல் மூலம் மதுரை சைபர் கிரைம் போலிசார் இருவரை மடக்கிபிடித்து கைது செய்தனர். போலீசார் விசாரணையில் போலியாக முகநூல் கணக்கு மூலம் போலியாக வங்கி போல் லோன் தருவதாக விளம்பரம் செய்து மோசடி செய்து பலரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

  இதையும் படிக்க: சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடு: சீமான் விமர்சனம்


  இதையடுத்து, சிவகங்கையை சேர்ந்த பிரசாந்த் குமார் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.30 ஆயிரத்தை பறிமுதல்  செய்த போலீசார், இருவரையும் உசிலம்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்
  Published by:Murugesh M
  First published: