முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிக்கன் பிரியாணி வாங்க சில்லறையோடு குவிந்த மதுரைக்காரங்க...திறந்த வேகத்தில் மூடப்பட்ட புதிய ஓட்டல்!

சிக்கன் பிரியாணி வாங்க சில்லறையோடு குவிந்த மதுரைக்காரங்க...திறந்த வேகத்தில் மூடப்பட்ட புதிய ஓட்டல்!

பிரியாணி

பிரியாணி

நண் பகல் 12 மணி முதல் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே,  சிறுவர்கள், முதல் முதியவர்கள் வரை 5 பைசாவுடன் பிரியாணி வாங்க காலையிலேயே வரிசையில் காத்திருக்க தொடங்கினர். கடை திறந்தது வரிசையில் நிற்காமல் முண்டியடித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

மதுரையில் புதிய  உணவகம் திறப்பு விழாவை முன்னிட்டு 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமானோர்  பைசாவுடன் குவிந்தனர். தள்ளு முள்ளு ஏற்பட்டதால் உணவகம் மூடப்பட்டது.

மதுரை செல்லூர் ரோட்டில் இன்று புதிதாக  அசைவ ஓட்டல் ஒன்றின் திறப்பு விழா நடந்தது . முதல் நாள் திறப்பு விழா சலுகையாக, 5 பைசா கொண்டு வந்தால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில்  இது தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இன்று திறப்பு விழாவையொட்டி, நண் பகல் 12 மணி முதல் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே,  சிறுவர்கள், முதல் முதியவர்கள் வரை 5 பைசாவுடன் பிரியாணி வாங்க ஆர்வமுடன் குவிந்தனர். அவர்கள் காலை 11 மணிக்கே 5 பைசாவுடன் பிரியாணி வாங்க ஆர்வமுடன் வரிசையில் நிற்க தொடங்கினர். நண்பகல் 12 மணிக்கெல்லாம் வரிசை நீண்டுகொண்டே செல்லத் தொடங்கியது.

இதையும் படிங்க:  ஒன் டிரில்லியன் டாலர் பொருளாதாரம் - கமல்ஹாசன் மகிழ்ச்சி ட்வீட்!

நண் பகல் 12/45/மணி அளவில் 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. உடனடியாக பொதுமக்கள் வரிசையில் நிற்காமால், ஒரே நேரத்தில் கூட்டம் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. கொரோனா தடுப்பு விதிமுறைகளான முக கவசம், சமூக இடைவெளி இன்றி கூட்ட நெரிசலில் பலர் சிக்கினர் .

மேலும் படிக்க: தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம் - வியந்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சிறுவர்கள், முதல் பெரியவர்கள் வரை முண்டியடித்து கொண்டு ஒருவரையொருவர் தள்ளி கொண்டு 5 பைசா கொடுத்து பிரியாணி வாங்க முண்டியடித்தனர். ஒரு கட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் கடை அடைக்கப்பட்டது. மேலும், 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கும் சலுகை முடிந்து விட்டது எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் 5 பைசா கொண்டு வந்தும், கூட்டத்தில் சிக்கியும் ஆர்வமுடன் பிரியாணி வாங்க வந்தவர்கள், ஏமாற்றத்துடன் அங்கேயே நின்றிருந்தனர்.

top videos

    போலீசார் வந்து கூட்டத்தை கலைத்தனர்.இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    First published:

    Tags: Briyani, Madurai