திருமங்கலத்தில் இறைச்சிக்கடை ஒன்றில் ஒரு கிலோ இறைச்சி வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுவது அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ஒருகிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை மதுரையைச் சேர்ந்த இறைச்சிக்காரர் ஒருவர் அறிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பொதுவாக, ஆடி மாதம் என்றாலே தள்ளுபடி தான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவை ஆடி மாதத்தில் மிகவும் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வது வாடிக்கையானது. இதனை மிஞ்சும் வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இறைச்சிக்கடை ஒன்று சார்பில் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலத்தில் மகிழ் என்ற பெயரில் இறைச்சிக் கடையை நடத்திவரும் சந்திரன், தனது கடையில் ஒரு கிலோ இறைச்சி வாங்குவோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஆடி மாதம் முழுவதும் இந்த சலுகை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனை!
இங்கு ஆடு, நாட்டுகோழி, வாத்து, முயல், வான்கோழி, காடை, கருப்புக்கோழி, கின்னிக்கோழி எனபல ரகங்களில் இறைச்சிகள் விற்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக் கடையை தொடங்கிய சந்திரன், அப்போதே 1 கிலோ இறைச்சிக்கு 6 முட்டை இலவசம் 12 முட்டை இலவசம் என பல்வேறு அதிரடி ஆஃபர்களை வழங்கியுள்ளார். தற்போது ஒரு கிலோ இறைச்சிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு மூலம் அனைவரையும் திக்குமுக்காட செய்துள்ளார்.
மேலும் படிக்க: ஒரே வாடிக்கையாளருக்கு இரண்டுமுறை போலி தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றிய தி.நகர் பிரபல நகைக்கடை!
இது குறித்து சுந்தரம் கூறுகையில், மக்களுக்கு நல்ல சத்தான இறைச்சிகளை வழங்க வேண்டும் என்பதற்காக உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இறைச்சிகளை விற்பதாக தெரிவித்தார். வாடிக்கையாளர்களுக்கு ஆடி மாதம் அதிரடி ஆபராக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி வருவதாகவும் ஆடி மாதம் முழுவதும் இந்த ஆஃபர் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர்: சிவக்குமார்- திருமங்கலம்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.