ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரையின் இன்னொரு விலாசம்- தேநீர் கடை குறித்து புகழ்ந்த எம்.பி சு.வெங்கடேசன்

மதுரையின் இன்னொரு விலாசம்- தேநீர் கடை குறித்து புகழ்ந்த எம்.பி சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்

மதுரையின் பிரபலமான தேநீர் கடையில் காபி குடித்த எம்.பி சு.வெங்கடேசன் அந்தக் கடை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரை மாவட்டத்தின் எம்.பியாக இருப்பவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எழுத்தாள் சு.வெங்கடேசன். காவல் கோட்டம், வேள்பாரி ஆகிய நூல்கள் இவரை தமிழ்நாடு முழுவதும் அறியச் செய்தது. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக உள்ள இவர், 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எப்போதும் ட்விட்டரில் பரபரப்பாக இயங்கும் வெங்கடேசன், எம்.பியாக தேர்வான பிறகு மத்திய அரசு மற்றும் மத்திய அரசு அமைப்புகள் செய்யும் தவறுகளைத் தொடர்ந்து ட்விட்டரில் விமர்சித்துவருகிறார். யூனியன் வங்கியில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு குறிப்பிட்ட வண்ண ஆடையை அணிந்து வர ஊழியர்களை கட்டாயப்படுத்தை எதிர்த்து ட்விட்டரில் பதிவிட்டு அந்த அறிவிப்பை வாபஸ் பெறச் செய்தார்.

சமீபத்தில் ஸ்டேட் பாங்க் 3 மாத கர்ப்பிணி பெண்களுக்கு வேலைக்கு தகுதியில்லை என்று வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டார். தொடர்ந்து ட்விட்டரில் களமாடிவருபவர் சு.வெங்கடேசன். அரசியல் பதிவுகளைத் தவிர்த்து அவர் செல்லும் இடங்களில் அவரைக் கவர்ந்தவற்றையும் ட்விட்டரில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டவர்.

இந்தநிலையில், மதுரையில் அமைந்துள்ள விசாலம் காபி கடை குறித்து பதிவிட்டுள்ளார். அந்த கடையில் வரிசையில் நின்று காபி குடித்த அவர், ‘அண்ணே ஒரு காபி குடுங்க...! சாரம் கட்டி வரிசையில் விடுவது சாராயக்கடைகளில் மட்டுமல்ல.. மதுரை விசாலம் காபி கடையிலும் உண்டு.. மதுரை முகவரிகளில் ஒன்று விசாலம் காபி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Madurai, Su venkatesan