Home /News /tamil-nadu /

ஜல்லிக்கட்டு போட்டியை எப்படி நடத்துவது? அமைச்சர் ஆலோசனை

ஜல்லிக்கட்டு போட்டியை எப்படி நடத்துவது? அமைச்சர் ஆலோசனை

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிப்பது, காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி மற்றும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஒமிக்ரான் வைரஸ் பரவிவரும் சூழலில் அலங்கநல்லூர் ஜல்லிகட்டு போட்டியை  நடத்துவது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையின் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். தற்போது தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த சூழலில், மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளை கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் விழா கமிட்டியினர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிப்பது, காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி மற்றும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    முன்னதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் விழாக்குழுவினர் போட்டிக்கான அழைப்பிதழை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி உறுதியாக நடைபெறும் என அமைச்சர் மூர்த்தி ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Jallikattu, Madurai, Omicron

    அடுத்த செய்தி