Home /News /tamil-nadu /

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவுத் திருவிழா: 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவுத் திருவிழா: 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஆண்கள் திருவிழா

ஆண்கள் திருவிழா

விழாவில் 60-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டன. கறி சமைத்து, கறி விருந்து படையலிட்டு, சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டு அசைவ உணவை ருசித்தனர்.

மேலும் படிக்கவும் ...
    மதுரையில்  ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

    மதுரை திருமங்கலம் அருகே உள்ளது அனுப்பப்பட்டி கிராமம். இங்கு காவல் தெய்வமாக கருதப்படும் கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவிழா நடைபெறும். விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது தான் இதன் தனிச்சிறப்பு.

    பக்தர்கள், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக கிடாய்களை வளர்த்து, கரும்பாறை முத்தையா கோயிலில் விட்டுச் செல்வார்கள். இந்த கிடாய்களை யாரும் பிடிக்க மாட்டார்கள். மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவிழாவின்போது, கிடாக்களைப் பிடித்து சாமிக்கு படையலிட்டு உணவு பரிமாறுவார்கள்.

    இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் 60-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டன. கறி சமைத்து, கறி விருந்து படையலிட்டு, சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டதுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டு அசைவ உணவை ருசித்தனர்.



    இலை விருந்து முடிந்தவுடன், இலையை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். இலைகள் காய்ந்த பின்பு தான் அந்தப் பகுதிக்கு பெண்கள் வர வேண்டும் என்ற கட்டுப்பாடும் பின்பற்றப்படுகிறது.

    இதையும் படிங்க: கொரோனா அச்சுறுத்தல்: பேருந்துகளில் நின்றபடி பயணிக்க தடை


     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Festival, Madurai

    அடுத்த செய்தி