Home /News /tamil-nadu /

மேலூர் மீன்பிடித் திருவிழா.. சிலேபி, கெழுத்தி நாட்டு மீன்களை பிடித்து மக்கள் மகிழ்ச்சி

மேலூர் மீன்பிடித் திருவிழா.. சிலேபி, கெழுத்தி நாட்டு மீன்களை பிடித்து மக்கள் மகிழ்ச்சி

மீன்பிடித் திருவிழா

மீன்பிடித் திருவிழா

Madurai News | Fish Festival | கட்லா, ரோகு, சிலேபி, கெழுத்தி என பல்வேறு வகையான நாட்டு மீன்களை பிடித்து அசத்தினார்.

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள் பல்வேறு வகையான நாட்டு மீன்களை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அய்யமுத்தான்பட்டியில் உள்ள கரை முனியாண்டி சுவாமி கோவிலுக்கு சொந்தமான பூலான்குடி கண்மாயில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், கிராம மக்கள் சாதி, மத பேதமின்றி சமத்துவத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை  வலியுறுத்தும் வகையிலும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

மீன் பிடித் திருவிழா


இந்த ஆண்டு மீன்பிடி திருவிழாவையொட்டி, உறங்காண்பட்டி, வெள்ளலூர்,  கோட்டநத்தாம்பட்டி,  மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக அதிகாலையிலே கண்மாயில் வந்து குவிந்தனர்.

Also Read: மயங்கி விழுந்த பள்ளி மாணவிக்கு பேய் ஓட்டிய சம்பவம்.. கல்வராயன்மலையில் பரபரப்பு

இதனையடுத்து கிராமத்தின் சார்பில் பெரியவர்கள் துண்டு  வீசப்பட்டு பிறகு அனைவரும் கண்மாயில் ஒன்றாக இறங்கி, தங்கள் கையில் வைத்துள்ள மீன் கூடைகள், வலைகள், கச்சா, உள்ளிட்டவைகளை கொண்டு கட்லா, ரோகு, சிலேபி, கெழுத்தி என பல்வேறு வகையான நாட்டு மீன்களை பிடித்து அசத்தினார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Festival, Fish, Madurai, Melur Constituency, Tamil News

அடுத்த செய்தி