• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி- 11 வழிகாட்டு நெறிமுறைகள் கோயில் நிர்வாகம் வெளியீடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி- 11 வழிகாட்டு நெறிமுறைகள் கோயில் நிர்வாகம் வெளியீடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

இரண்டு மாதமாக மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் தரிசிக்க இயலாமல் தவித்த பக்தர்கள் இன்று பக்திக் பரவசத்துடன் சுவாமி தரிசனம்

  • Share this:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொற்று  பரவல் குறைந்து வருவதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து வழிபாட்டுத்தலங்கள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மாதமாக மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் தரிசிக்க இயலாமல் தவித்த பக்தர்கள் இன்று பக்திக் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு என 11 வழிகாட்டு நெறிமுறைகள் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

1 ) மதுரை , அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பக்தர்கள் வழிபாட்டிற்காக 05.07.2021 முதல் காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் .

2 ) பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பொது தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் . ரூ .100 / - ரூ .50 / - விரைவு தரிசன கட்டணசீட்டு பெறும் பக்தர்கள் தெற்கு கோபுர நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் .
மேற்கு மற்றும் வடக்கு நுழைவு வாயில் வழியாக இத்திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் .

3 ) கோவிட் – 19 காரணமாக பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும் .

4 ) திருக்கோயிலின் தெற்கு , கிழக்கு அம்மன் வாசலில் வெப்பநிலை பரிசோதனைக்குப்பின் அங்கு அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி ஸ்பிரேயர்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திய பின்பே திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் .

5 ) 10 வயதிற்கு குறைவானவர்கள் , 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் , மற்றும் கர்ப்பிணி பெண்கள் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது .

6 ) சளி , காய்ச்சல் , இருமல் உள்ளவர்கள் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது .

7 ) திருக்கோயிலில் நடக்கும் காலபூஜைகள் மற்றும் அபிசேகங்களை காண பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் .

8 ) திருக்கோயில் வளகத்திற்குள் சமூக இடைவெளி பின்பற்றிட திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் குறியீடு செய்யப்பட்ட சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் தரிசனம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது .

9 ) பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு திருக்கோயிலில் எந்த ஒரு இடத்திலும் உட்கார அனுமதி கிடையாது .

10 ) பக்தர்கள் திருக்கோயிலுக்குள் தேங்காய் , பழம் , கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது . அர்ச்சனை செய்வதற்கு அனுமதி இல்லை .

11 ) திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் வழக்கம்போல் நிர்வாகத்தின் மூலம் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும்  எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: