தரிசனம் மட்டுமே, உட்கார அனுமதியில்லை: பக்தர்களுக்கான நெறிமுறைகளை வெளியிட்டது மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம்!

கோப்புப் படம்

 சளி , காய்ச்சல் , இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோயிலில் நடக்கும் காலபூஜைகள் மற்றும் அபிசேகங்களை காண பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • Share this:
உலக புகழ்பெற்ற மதுரை  மீனாட்சிஅம்மன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ள நிலையில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத்  தலங்களும் அடைக்கப்பட்டன. பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.  தற்போது தொற்று  பரவல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

அதன்படி நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அதன் ஒரு பகுதியாக உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர் .  இந்நிலையில்,  கடைபிடிக்க வேண்டிய   11 வழிகாட்டு நெறிமுறைகள்  கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 80 நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் நாளை திறப்பு...

அதன்படி,  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பக்தர்கள் வழிபாட்டிற்காக நாளை முதல் காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை  திறந்திருக்கும்.   பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பொது தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் . ரூ .100 / - ரூ .50 / - விரைவு தரிசன கட்டணசீட்டு பெறும் பக்தர்கள் தெற்கு கோபுர நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் . மேற்கு மற்றும் வடக்கு நுழைவு வாயில் வழியாக இத்திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும்,  பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும்  என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கோயிலின் தெற்கு , கிழக்கு அம்மன் வாசலில் வெப்பநிலை பரிசோதனைக்குப்பின் அங்கு அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி ஸ்பிரேயர்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திய பின்பே திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் .  10 வயதிற்கு குறைவானவர்கள் , 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் , மற்றும் கர்ப்பிணி பெண்கள் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் சூர்யாவை கண்டித்து பாஜக இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!


இதேபோல்  சளி , காய்ச்சல் , இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோயிலில் நடக்கும் காலபூஜைகள் மற்றும் அபிசேகங்களை காண பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் வளகத்திற்குள் சமூக இடைவெளி பின்பற்றிட திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் குறியீடு செய்யப்பட்ட சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் தரிசனம் செய்திட வேண்டும்.   பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு திருக்கோயிலில் எந்த ஒரு இடத்திலும் உட்கார அனுமதி கிடையாது .  பக்தர்கள் திருக்கோயிலுக்குள் தேங்காய் , பழம் , கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது . அர்ச்சனை செய்வதற்கு அனுமதி இல்லை . திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் வழக்கம்போல் நிர்வாகத்தின் மூலம் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும்  எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Published by:Murugesh M
First published: