Home /News /tamil-nadu /

ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.. விதிகள் ஏதும் மீறப்படவில்லை... தமிழக அரசிடம் இருந்து எந்த தடையும் வரவில்லை... டாக்டர்கள் சங்கம் விளக்கம்

ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.. விதிகள் ஏதும் மீறப்படவில்லை... தமிழக அரசிடம் இருந்து எந்த தடையும் வரவில்லை... டாக்டர்கள் சங்கம் விளக்கம்

மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ரத்னவேலு.

மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ரத்னவேலு.

Madurai Sanskrit Row: தமிழக அரசிடமிருந்து அலுவலக ரீதியாக எந்தவித தடையும் வழங்கப்படாத நிலையில், பெரும்பாலான தனியார், அரசு கல்லூரிகளில் சரக்கா உறுதிமொழி ஏற்கப்பட்டு உள்ளது. அதுவும் ஆங்கிலத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது.

    சமஸ்கிருத சர்ச்சையால் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று கூறி அதுதொடர்பாக விரிவான விளக்கத்தை மருத்துவர்கள் சங்கம் அளித்துள்ளது.

    மதுரை மருத்துவக்கல்லூரியில் சனிக்கிழமையன்று முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருத கருத்துக்கள் அடங்கிய உறுதிமொழியை ஏற்ற விவகாரம் தொடர்பாக டீன் ரத்தினவேலு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதீஷ், கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட உறுதிமொழியை தான் வாசித்தோம். சமஸ்கிருத வாக்கியங்களை நாங்கள் படிக்கவில்லை.

    2019 ஆம் ஆண்டு முதல் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய வழிகாட்டு நடைமுறைபடியே நாங்கள் அப்படி வாசித்தோம். அவசர கதியில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்பதால், டீன் உள்ளிட்ட மேலதிகாரிகள் கவனத்திற்கு அது கொண்டு செல்லப்படவில்லை.

    தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்ததன் அடிப்படையில் வாசிக்கப்பட்ட உறுதிமொழி அது. அதில் எந்தவித உள் நோக்கமும் கிடையாது. முழுக்க முழுக்க மாணவர்கள் தயாரித்த உறுதிமொழி அது, அதில் டீன் தலையீடு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க - சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் டீன் தலையீடு இல்லை : மருத்துவ கல்லூரி மாணவர்கள் விளக்கம்

    இந்த நிலையில், கல்லூரி முதல்வர் ரத்தினவேலை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

    30.4.2022 அன்று மதுரை மருத்துவக் கல்லூரியில் White Coat Ceremony ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்த சரக்கா சபதமும் மருத்துவ மாணவர்கள் உறுதி மொழியாக எடுத்தனர்; இந்த நிகழ்வில் சமஸ்கிருதம் மற்றும் பிற மொழிகள் பயன்படுத்தி எந்தவித உறுதிமொழியோ அல்லது பேச்சுக்களோ நடைபெறவில்லை என்பதனை சங்கம் மரியாதைக்குரிய முதல்வர் அவர்களுக்கு தெரியப்படுத்துகிறது.

    WhiteCoat Ceremony மற்றும் சரக்கா உறுதிமொழி மதுரையில் நடந்த நிகழ்வில் ஆங்கிலத்தில் தான் எடுக்கப்பட்டது. ஆனால் தவறுதலாக தினசரி மற்றும் தொலைக்காட்சிகள் மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தார்கள் என்று செய்தி படுத்தப்பட்டது.

    இது முற்றிலும் பொய் ஆங்கிலத்தில் தான் உறுதிமொழி எடுக்கப்பட்டது என்பதனை மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

    தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி தான் இந்த வைட் கோட் செரிமனி நடைபெற்றது. வைட் கோட் செரிமனி குறித்து தமிழக அரசு அல்லது மருத்துவ கல்வி இயக்குனர் அவர்கள் எந்தவித ஆணையும் வழங்காத நிலையில் வைட் கோட் செரிமணி நடத்துவது குறித்து அலுவலக ரீதியாக எந்தவித தடையும் இல்லாத நிலையில் ஒரு சில இடங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சிலர் கலந்துகொண்டு அதில் சில இடங்களில் ஹிப்போகிரடிஸ் உறுதிமொழியும் சில இடங்களில் சரக்கா உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

    தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மேற்கூறிய உண்மைகளை மாண்புமிகு முதல்வர் அவர்களின் மேலான பார்வைக்கு கொண்டு வந்து சரக்கா சபதத்திற்கு சங்கமும் பெரும்பாலான அலுவலர்களும் மருத்துவர்களும் எதிர்ப்பாக இருந்த நிலையிலும் தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கையின் பெயரிலேயே இவை எடுக்கப்பட்டது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இதையும் படிங்க - சமஸ்கிருத சர்ச்சையில் கல்லூரி டீனை பொறுப்பாக்கக் கூடாது: ப. சிதம்பரம் ட்வீட்

    இதுபோலவே மதுரை மருத்துவக்கல்லூரி நிகழ்விலும் மருத்துவ மாணவர்கள் சரக்கா உறுதிமொழியை ஆங்கிலத்தில் தான் எடுத்தார்கள் என்றும் இதில் முதல்வர் மற்றும் பிற அலுவலர்கள் யாரும் எந்தவித உளநோக்கத்துடன் செயல்படவில்லை என்பதளையும் தங்களது கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

    மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த நிகழ்வை களிவுடன் பரிசீலித்து முதல்வர் டாக்டர் ரத்தினவேல் அவர்களை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதல்வராக பணியமர்த்தி, ஆணையிடும்படி வேண்டுகிறோம்.

    தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து முதல்வர்களும் மருத்துவர்களும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் என்றும் தமிழக அரசின் ஆணைகளுக்கும், கொள்கைகளுக்கும், விதிகளுக்கும் மாறாக செயல்பட மாட்டோம் என்றும் மாணவர்களும் அவ்வாறே என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Madurai, Madurai Medical college students, Sanskrit

    அடுத்த செய்தி