Home /News /tamil-nadu /

மாற்றுத்திறனாளிகளுக்கான எளிய கழிவறை - மதுரை கண்டுபிடிப்பாளரின் முயற்சியை அங்கீகரிக்குமா அரசு?

மாற்றுத்திறனாளிகளுக்கான எளிய கழிவறை - மதுரை கண்டுபிடிப்பாளரின் முயற்சியை அங்கீகரிக்குமா அரசு?

எளிய கழிவறை

எளிய கழிவறை

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி இருந்தாலும், இந்த எளிய கழிவறையை பொது இடங்களில் வைப்பதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் அதிக பலன் அடைவார்கள் என்பது மாற்றுத் திறனாளியான முகமது சாதிக்கின் கருத்தாகும்.

  மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீக்சியன் ஒருவர் மாற்றுத் திறனாளிகளுக்கான எளிய கழிவறையை உருவாக்கியுள்ளார். இதற்கு அரசு ஒப்புதல் வழங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ள அவர், அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.

  மதுரை பீ. பீ.குளம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஜாக் (53), எலக்ட்ரிக்சியன் தொழில் செய்து வருகிறார். சிறுவயதிலிருந்தே, புதிய சாதனங்களை கண்டுபிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டதன் காரணமாக, இதுவரை 48 புதிய சாதனங்களை கண்டுபிடித்துள்ளார்.

  அதில், இவர் கண்டுபிடித்த எளிமையாக சாதம் வடிக்கும் ரைஸ் குக்கர், நடமாடும் சீலிங் பேன் என இரு கண்டுபிடிப்புகளுக்கு தேசிய விருதையும் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில் எதேனும் செய்திட வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வந்த இவர், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான எளியவகை Adjustable டாய்லெட்டை கண்டுபிடித்து அசத்தி உள்ளார்.

  ஒன்றரை அடி பைப், வால் கிளாம்ப் மற்றும் வட்ட வடிவில் ஒரு தகரம் என எளிய முறையிலும், 4 அடி வரை உயர்த்தி கொண்டு, மாற்றுத்திறனாளிகள் அமரும் வகையிலும் ரூ.4,000 செலவு செய்து வடிவமைத்துள்ளார். இவர் வடிவமைத்த சாதனம் தொடர்பாக மத்திய அரசு சார்ந்த ARTIFICIAL LIMBS MANUFACTURING CORPORATION OF INDIA நிறுவனம், அதன் செயல்முறை வடிவத்தை அனுப்பி வைக்குமாறு கடிதம் அனுப்பி உள்ளது. அதுமட்டுமல்லாது, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரிடமும் ஒப்புதல் கேட்டு இவர், கடிதம் அனுப்பியுள்ளார்.

  இதையும் படிங்க: 'ஜெய்பீம் படத்தால் நாங்கள் கௌரவிக்கப்படுகிறோம்' - முதல் முறையாக நரிக்குறவர் பெண் வேட்பு மனுதாக்கல்!


  இது குறித்து அப்துல் ரஜாக் பேசுகையில், "பொது இடங்களில் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகள் கழிவறைக்கு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, இந்த Adjustable டாய்லெட் மூலம், மாற்றுத்திறனாளிகள் எளிதாக இயற்கை உபாதைகளை கழிக்க  முடியும் என்றும், வயதானவர்கள், சிறு குழந்தைகள் உட்பட அனைத்து நபர்களும் இதை எளிதாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.  மேலும், பொருளாதார நெருக்கடியின் காரணமாக Manual முறையில் செயல்படும் வகையில் தயாரித்துள்ளதாகவும், இதில், 20,000 ஆயிரம் செலவு செய்தால் Auto முறையில் Hydrolic Adjustable டாய்லெட் ஆக மாற்றிவிடலாம்,  அரசு விரைவில் ஒப்புதல் வழங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும்  என்றும், அரசு உதவி செய்து ஊக்குவித்தல் மேலும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பேன்" என்றும் தெரிவித்தார்.

  மேலும் படிக்க: கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன்’.. அதிமுக ஒன்றிய செயலாளர் சர்ச்சை பேச்சு.. கைது செய்ய முயன்றபோது மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிவு..


  தொடர்ந்து, முகமது சாதிக் (மாற்றுத்திறனாளி) பேசுகையில், "பொது இடங்களில்  கழிவறைக்கு தவழ்ந்து   செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும், இதனாலேயே, தாங்கள் வீட்டிற்கு வந்து கழிவறைக்கு செல்வதால் மிகவும் கடினமாக இருப்பதாகவும், இந்த Adjustable டாய்லெட்  எளிதாக உள்ளது என்றும், இதை பொது இடங்களில் வைப்பதன் மூலம் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் பயன் பெறுவார்கள், இதை விரைவில் மக்கம் பயன்பாட்டிற்கு. கொண்டு வர அரசு முன் வர வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

  மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி இருந்தாலும், அன்றாட வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை தீர்க்கும் வகையில் அப்துல் ரஜாக் உருவாக்கியுள்ள இந்த கழிவறைக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன் -மதுரை

   
  Published by:Murugesh M
  First published:

  Tags: Madurai, Modern Toilet, Toilet

  அடுத்த செய்தி