ஆக்ஸிஜன் கிடைக்காமல் தாய் இறந்ததை பார்த்து பரிதவிப்பு... ஆக்ஸிஜன் செறிவூட்டியை இலவசமாக வழங்கிய தமிழர்

Youtube Video

தாய் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சு விடுவதற்கு சிரம்பட்டு உயிரிழந்ததை வீடியோ கால் மூலம் பார்த்து பரிதவித்துள்ளார் பாலமுருகன்.

 • Share this:
  ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழந்த தனது தாயின் நினைவாக ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியை ஆக்ஸிஜன் தேவைப்படும் ஏழை, எளியோருக்கு இலவசமாக வழங்கி வரும் ஆஸ்திரேலியா வாழ் தமிழருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

  மதுரை விளாங்குடியை சேர்ந்த பாலமுருகன் ஆஸ்திரேலியாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் தனமணி விருதுநகரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் வீட்டிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

  தாய் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சு விடுவதற்கு சிரம்பட்டு உயிரிழந்ததை வீடியோ கால் மூலம் பார்த்து பரிதவித்த பாலமுருகன், இதுபோன்ற நிலை யாருக்கும் வரக் கூடாது என்று எண்ணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தேவைப்படும் ஏழைகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கிடைக்க வழிவகை செய்து வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அந்த வகையில் போடி அரசு மருத்துவமனைக்கு இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சென்னை மற்றும் பெங்களூரை சேர்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு என மொத்தம் 6 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.  ஆக்ஸிஜன் செறிவூட்டி மூலம் ஒரு நோயாளிக்கு 7 நாட்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கி வருவதாகவும், இதன்மூலம் மருத்துவமனையில் வேறு ஒருவருக்கு சிகிச்சை கிடைக்கும் சூழல் உருவாகும் என்றும் தெரிவிக்கிறார் பாலமுருகனின் நண்பர் அருள் ஏசுதாஸ்.

  Also Read : மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ல் தண்ணீர் திறப்பு - தஞ்சை விவசாயிகள் வரவேற்பு

  ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழ்வதை தடுக்க தனது நண்பர்களுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வரும் பாலமுருகன் செய்து வரும் இந்த சேவை அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.
  Published by:Vijay R
  First published: