Home /News /tamil-nadu /

வாக்குப்பதிவின்போது ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு- பாஜக முகவருக்கு மார்ச் 4 வரை நீதிமன்ற காவல்

வாக்குப்பதிவின்போது ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு- பாஜக முகவருக்கு மார்ச் 4 வரை நீதிமன்ற காவல்

ஹிஜாப்

ஹிஜாப்

இஸ்லாமிய பெண் வாக்காளரின் முகத்திரையை (ஹிஜாப்) விலக்கக் கோரி கிரிநந்தன் பிரச்சனையை எழுப்பியுள்ளார். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுக, திமுக முகவர்கள் புகார் தெரிவித்ததால் பாஜக பிரமுகர் கிரி வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் படிக்கவும் ...
    மதுரையில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவருக்கு மார்ச் நான்காம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பிஜேபியை சேர்ந்த வேட்பாளர் திருமதி அம்சவேணி க/பெ ராமச்சந்திரன், மேலூர் என்பவர் போட்டியிடுகிறார்.
    அவருக்கு வாக்குச்சாவடி முகவராக அவருடைய மகன் கிரி நந்தன் வயது 43 என்பவர் வாக்குச்சாவடி எண் 27 அல்-அமீன் பள்ளியில் நியமிக்கப்பட்டார்.

    நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வந்தது. காலை 8.30 மணியளவில் அங்கு வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண் வாக்காளரின் முகத்திரையை (ஹிஜாப்) விலக்கக் கோரி கிரிநந்தன் பிரச்சனையை எழுப்பியுள்ளார். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுக, திமுக முகவர்கள் புகார் தெரிவித்ததால் பாஜக பிரமுகர் கிரி வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    இதையும் படிங்க: அமைதியாக நடைபெற்று முடிந்த தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சென்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள்


    அதனடிப்படையில் அவரது கட்சி நிர்வாகிகள் அவரை பணியில் இருந்து விடுவித்து வேறு ஒருவரை வாக்குச்சாவடி முகவராக நியமித்தனர். ஹிஜாபை அகற்ற கூறிய விவகாரத்தில் வாக்குப்பதிவு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக  அங்கு பணியில் இருந்த தேர்தல் அலுவலர் கொடுத்த புகாரின் பெயரில் மேற்படி கிரி நந்தன் என்பவரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.  இதை தொடர்ந்து மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மார்ச்4ம் தேதிவரை  நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Local Body Election 2022, Madurai

    அடுத்த செய்தி