மதுரை கேந்திரிய வித்யாலா பள்ளி தேர்வில் இஸ்லாமிய பெண் குழந்தைகளின் கல்வி நிலை குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயிலும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று (ஆக.23) நடத்தப்பட்ட மாத தேர்வில் இஸ்லாமிய பெண் குழந்தைகளின் கல்வி நிலை குறித்து ஒரு கேள்வி கேட்டக்கப்பட்டு உள்ளது.அதில், "இஸ்லாமியர்கள் குறித்த பொதுவான கருதுகோள் என்ன?" என்று கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு 4 விடைகள் அளிக்கப்பட்டு இருந்தன.
அவை
1.பெண் குழந்தைகள் கல்வி கற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்
2. பெண் குழந்தைகள் கல்வி கற்பதை அவர்கள் விரும்புவார்கள்
3. அவர்களில் சிலர் ஏழைகள்
4. மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை
இந்த நான்கு பதில்களில், முதல் பதிலான, "பெண் குழந்தைகள் கல்வி கற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்" என்பது சரியான பதில் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி இஸ்லாமியர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து, அந்த கேள்வியை தேர்வில் கேட்ட பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் தேவ் ரத்தன் என்பவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
Also Read: அமைச்சரின் பேச்சால் சங்கடம்.. சட்டப்பேரவையில் மன்னிப்பு கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதற்கு பதிலளித்த அவர்,"தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 6 ஆம் வகுப்பு குடிமையியல் புத்தகத்தில் உள்ள இரண்டாம் பாகத்தில், 18 வது பக்கத்தில் இடம் பெற்றிருந்த தகவலின் அடிப்படையில் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
அதில், 'சில இஸ்லாமியர்கள் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை விரும்புவது இல்லை. அதனால் அவர்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது இல்லை. இஸ்லாமிய மக்களிடம் நிலவும் ஏழ்மையே இதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஏழ்மை காரணமாக பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு சில ஆண்டுகளில் இடைநிற்றலும் நிகழ்கின்றன.
ஏழை மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்க எடுக்கப்பட முயற்சிகளின் விளைவாக, இஸ்லாமியர்கள் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆர்வம் செலுத்தியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் கிராமப்புற பகுதிகளில் கல்வி வளர்ச்சியை அதிகரிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் காரணமாக அங்கு அதிகமான இஸ்லாமிய பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடிந்தது.
கேரளா போல் பிற மாநிலங்களில், ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக இஸ்லாமியர்கள், பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் ஆகியோர் பள்ளிக்கு தொடர்ந்து செல்வதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். எனவே, இஸ்லாமிய பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கு ஏழ்மையே காரணமாக இருக்கிறது" இவ்வாறு அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த தகவலின் அடிப்படையிலேயே அந்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. இது உண்மை அல்ல. இது ஒரு பொதுவான கருதுகோள் மட்டுமே. இந்தியாவில் இஸ்லாமிய குழந்தைகளின் கல்வி நிலை குறித்து விவாதிக்கும் நோக்கில் அந்த பாடம் இடம் பெற்றுள்ளது. இந்த கருதுகோள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதனை சரி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் வகுப்பில் இந்த பாடம் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது" என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், "இஸ்லாமிய பெண் குழந்தைகள் கல்வி கற்க இயலாமல் போனதற்கு காரணம் ஏழ்மை" என்பது தெரிய வந்திருக்கிறது.இந்நிலையில், புத்தகத்தில் இடம்பெற்று உள்ள தகவலின் சாராம்சத்தை தவறாக புரிந்து கொள்ளும் வகையில் அந்த ஆசிரியர் இப்படி ஒரு கேள்வியை தேர்வில் கேட்டு உள்ளாரோ என்கிற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Controversial speech, Kendriya vidyalaya, Kendriya vidyalaya school, Madurai, Muslim Religion