• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அம்மா உணவக பெயர் பலகையில் கலைஞர் கருணாநிதி படம்!

அம்மா உணவக பெயர் பலகையில் கலைஞர் கருணாநிதி படம்!

அம்மா உணவகம்

அம்மா உணவகம்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    மதுரையில் அம்மா உணவக பெயர் பலகையில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடன் சேர்த்து மறைந்த  முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் படமும் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு முதல் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன.
    காலை இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் கறிவேப்பிலை சாதம் போன்றவை மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த உணவகங்களில் திமுக ஆட்சி அமைந்த பிறகு சென்னையில் சிலர் அம்மா உணவகம் தாக்கப்பட்டு சர்ச்சையான பின்னர், முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்திருந்தார்.
    தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளின் போது அம்மா உணவகத்தில் இலவசமாக உணவுகளை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    மதுரை மாநகராட்சியில் 12 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.  இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்து விட்டு திமுக பிரமுகர்களுக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தி உள்ளதாக புகார்களும் எழுந்தன. இந்நிலையில், இந்த உணவகத்தில் வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தோடு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி படமும் பொறிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: வெற்றி

    இதையும் படிங்க: கோவிலில் 100 சவரன் தங்க நகை கையாடல்: பாஜக பிரமுகரை தேடிவரும் போலீஸ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: