மதுரையில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்- நலப்பணி இணை இயக்குனர் அறிவிப்பு

மாதிரிப்படம்

மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு ஆட்கள் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
மதுரை மாவட்டத்தில் நோய்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழ்நிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்ற காரணத்தால் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சேர்க்கைக்கு அரசு மருத்துவமனைகளில் பணி புரிய மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

அதில், மதுரை மாவட்டத்தில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சைப் பிரிவில் பணிபுரிய விருப்பமுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர்கள், கணினி உதவியாளர்( Data Entry Operator ) மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தங்களது விண்ணப்பம், கல்வி சான்றிதழ்கள்( அசல் மற்றும் ஒரு பதிப்பு ), இதர சான்றிதழ்கள், முன் அனுபவ சான்றிதழ்களுடன் மதுரை மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் தற்காலிக அலுவலகம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ( கூடுதல் கட்டடம் ) வளாகம் 3வது தளத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என நலப்பணி இணை இயக்குனர் குறிப்பிட்டு உள்ளார்.

பணிபுரிய இருக்கும் மருத்துவமனை விவரங்கள்:

1. அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, உசிலம்பட்டி , மதுரை மாவட்டம்
2. அரசு மருத்துவமனை, திருமங்கலம்
3. அரசு மருத்துவமனை, மேலூர்
4. அரசு மருத்துவமனை, திருப்பரங்குன்றம்
5. அரசு மருத்துவமனை, வாடிப்பட்டி
6. அரசு மருத்துவமனை, பேரையூர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: