Home /News /tamil-nadu /

தமிழகத்திலேயே அதிக கொரோனா பரிசோதனை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி சாதித்தது எப்படி?

தமிழகத்திலேயே அதிக கொரோனா பரிசோதனை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி சாதித்தது எப்படி?

ஆய்வகம்

ஆய்வகம்

கொரோனாவை வெல்லும் போரில் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வைராலஜி துறையினர் சாதனை படைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மதுரை மாவட்டத்தில் கொரோனா இரண்டு அலைகளும் சேர்த்து மொத்தம் 73 ஆயிரத்து 26 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 71 ஆயிரத்து 314 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 572 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1,140 நபர் உயிரிழந்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவ்வளவு நபர்களையும் கண்டறிந்து, சிகிச்சை அளித்து குணப்படுத்தும் பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் இரவும் பகலும்  தூக்கத்தை மறந்து வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி உழைத்தது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், இவர்களைப் போன்றே மிகுந்த போற்றுதலுக்கு உரியவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி வைராலாஜி துறையினர்.

இதையும் படிங்க: தமிழக அரசின் நீட் ஆய்வுக்குழு செல்லும்: பாஜக மனு தள்ளுபடி!


இவர்கள் தான் கொரோனா பாதித்த ஒவ்வொருவரின் முடிவுகளையும் துல்லியமாக கண்டறிந்து, விரைவாக அறிவித்து அவர்களுக்கு வேண்டிய சிகிச்சை அளிக்க உறுதுணையாக இருப்பவர்கள். இவர்கள் மூலம் தற்போது பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது மதுரை அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா ஆய்வகம்.

இரண்டாம் அலை காலத்தில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 15,000 மாதிரிகளை பரிசோதனை செய்துள்ள இந்த ஆய்வகம், இதுவரை மொத்தமாக 17 லட்சத்து 50,000 க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை செய்து அசத்தியிருக்கிறது. தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆய்வகங்களில் அதிக பரிசோதனைகளை செய்த ஆய்வகம் என்னும் பெருமையை வசமாக்கியுள்ளது மதுரை அரசு மருத்துவக்கல்லூரி.இது குறித்து, மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர் சுகுமாரி பேசுகையில், ’கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், 24 மணி நேரமும், ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் ஆய்வகம் இயங்கி வருகிறது. முதல் அலையில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளை சோதனை செய்துள்ளோம். எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும்,ஆய்வக பணியாளர்கள், பேராசிரியர்கள் யாரும் முகம் சுளித்ததே கிடையாது அது தான் இந்த சாதனைக்கு காரணம்.

ஆய்வக முடிவுகளை வாங்க மக்கள் குவிவதை தடுக்க முதன் முதலாக மதுரையில் எஸ்.எம்.எஸ். நடைமுறையை சாத்தியப் படுத்தினோம்.அதனை தொடர்ந்து, இணையதளம் வழியாக அவர்களின் முடிவுகளை தெரிந்துகொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நடைமுறைகளால் மக்கள் கூடுவதும், தொற்று பரவுவதும் தவிர்க்கப்பட்டது’  என்றார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி


நுண்ணுயிரியல் துறை முதுநிலை மருத்துவ மாணவி மஞ்சரி பேசுகையில்,  ‘முதல் ஒரு வாரம் மிகுந்த பயமாகவும், மலைப்பாகவும் இருந்தது. நமக்கு கொரோனா வந்து விடக்கூடாது என்ற பயம் இருந்ததே ஒழிய, எங்கள் ஆய்வகத்தில் உள்ள 60 நபர்களும் ஒரு நாளும் வேலை செய்ய சளைத்ததே இல்லை.எங்களால் 20,000 மாதிரிகளை கூட ஒரே நாளில் பரிசோதனை செய்ய முடியும். அந்த அளவிற்கு எங்கள் உயர் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருக்கிறது. எனவே இப்பொழுது எங்களுக்கு கொரோனா குறித்த அச்சம் நீங்கி, பெரும் பொறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சமூக நீதிக்கு பாடுபடுவதாக காட்டும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வது தேசதுரோகம் - நடிகர் விஜய் வழக்கில் நீதிமன்றம் காட்டம்!


பரிசோதனை செய்யும் போது சில குழந்தைகளின் வயதை அறிந்து அவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா இருக்க கூடாது என்று வேண்டிக் கொள்வோம். அனைத்து நோயாளிகளுக்கும் சரியான அறிக்கை சென்று சேர வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தோடு தான் ஒவ்வொரு சோதனையையும் மேற்கொள்கிறோம்" என்றார்.

மேலும் படிக்க: விநோத நோயால் கும்பகர்ணன் ஆன நபர்... வருஷத்தில் 300 நாள் தூங்கியே கழிக்கிறார்!


கொரோனா பணிகளால் குடும்பத்தினரை சரியாக கவனிக்க முடியவில்லையே என்கிற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், மக்களுக்காக உழைக்கிறோம் என்று உணர்ந்த பின்னர், நாங்கள் இருக்க வேண்டிய இடம் வீடல்ல ஆய்வகம் தான் என்று உள்ளுக்குள் உறுதியேற்றுக் கொண்டோம் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள் மதுரை மருத்துவக்கல்லூரி ஆய்வக பணியாளர்கள்.
Published by:Murugesh M
First published:

Tags: Corona Warriors, Madurai

அடுத்த செய்தி