Home /News /tamil-nadu /

சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாக போலி பணி ஆணை வழங்கி மோசடி

சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாக போலி பணி ஆணை வழங்கி மோசடி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இதுபோன்ற போலி ஆணைகளை நம்பி பணம் கொடுத்து மக்கள் ஏமாற வேண்டாம் என்றும்,   அரசுப்பணிக்கான ஆள் தேர்வு எப்போதும் தேர்வு மூலமாகவோ அல்லது நேரடி நியமனமாகவோ நடைபெறும் எனவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    மதுரையில் சுகாதாரத் துறையில் நிரந்தர பணி வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு போலி ஆணைகளை வழங்கியது அம்பலமாகி உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் சுகாதார துறையில் நிரந்தர பணி வாங்கி தருவதாக கூறி மோசடி நடைபெற்றுள்ளது.   தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தர பணி வழங்குவதாக உறுதி அளித்து பண மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது.

    வேலை வேண்டுவோரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மதுரை சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படுவது போல, போலி பணி ஆணைகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது.

    சில நபர்களுக்கு சரியான முகவரியிலும், சிலருக்கு தவறான முகவரியிலும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. போலி பணி ஆணைகள் குறித்து புகார் வந்துள்ளதால், விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பேருந்தில் பாலியல் சீண்டல்.. ஊக்கு மூலம் தக்க பாடம் புகட்டிய பெண்


     இதுபோன்ற போலி ஆணைகளை நம்பி பணம் கொடுத்து மக்கள் ஏமாற வேண்டாம் என்றும்,   அரசுப்பணிக்கான ஆள் தேர்வு எப்போதும் தேர்வு மூலமாகவோ அல்லது நேரடி நியமனமாகவோ நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.  பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்  என்றும், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Health and welfare department, Madurai

    அடுத்த செய்தி