தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்று மதுரை மண்டல மின்சார வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மண்டல மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை எதிர்வரும் 07.12.2021-க்குள் செலுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என கடந்த 26.11.2021 அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வாரிய தலைவரால் அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Also Read: தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் கிடையாது.. பொது இடங்களுக்கு செல்லவும் தடை
ஆகவே தங்கள் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதற்கான விபர அறிக்கையை தவறாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்பிக்க அறிவுறுத்தும்படி அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள்/ மதுரை மண்டலம் அலுர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இது குறித்த விரிவான அறிக்கையினை 07.12.2021 சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: கொடைக்கானலை அச்சுறுத்தும் மேஜிக் மஷ்ரூம்.. சுற்றுலா பயணிகளை குறிவைக்கும் போதை கும்பல்
இந்த அறிவிப்பானது ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றறிக்கை குறித்து மின்சார வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், ”மின்சாரவாரியத்தில் பணிபுரியும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக” கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Corona Vaccine, Covid-19, Electricity, Madurai, Omicron, Tamil News