ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காயத்துடன் தவித்த முதியவர் - ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பிய மனிதநேய காவலர்!

காயத்துடன் தவித்த முதியவர் - ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பிய மனிதநேய காவலர்!

போக்குவரத்து காவலர், மதுரை

போக்குவரத்து காவலர், மதுரை

ஆம்புலன்ஸ் வரும்வரை முதியவருக்கு தேவையான முதலுதவிகள் செய்து, அவரது சுய நினைவு திரும்புவதற்கு உதவியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரையில் பலத்த காயத்துடன் சாலையில் ஆதரவற்ற நிலையில் தவித்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போக்குவரத்து காவலரின் மனிதநேய மிக்க செயல் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சந்தைபேட்டை பகுதியில் ஆதரவற்ற முதியவர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு காரணமாக அவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சுய நினைவின்றி மயக்கத்தில் சாலையோர நடைபாதையில் ஆதரவற்று தவித்து உள்ளார்.

Also Read:  ரூ.8 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தக்காரர் வெறும் ரூ.35,000 மின்சாரம் திருடி சிக்கினார்!

அப்போது அவ்வழியே ரோந்து பணிக்கு சென்று கொண்டிருந்த தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, உடனே முதியவரின் நிலையை கவனித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் வரும்வரை முதியவருக்கு தேவையான முதலுதவிகள் செய்து, அவரது சுய நினைவு திரும்புவதற்கு உதவியுள்ளார். மேலும், அவரை தன் கைகளால் தூக்கிச்சென்று ஆம்புலன்சில் ஏற்றி அமரவைத்து மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போக்குவரத்து காவலர் தங்கமணியின் இந்த மனிதநேயம் மிக்க செயலுக்கு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தனர்.

Published by:Arun
First published:

Tags: Humanitarian, Madurai