• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • "என்ன கால் மட்டும் தான் இருக்கு?" - நடுரோட்டில் சரக்கு வாகனத்தை நிறுத்தி போதையில் படுத்துறங்கிய இளைஞரால் பரபரப்பு

"என்ன கால் மட்டும் தான் இருக்கு?" - நடுரோட்டில் சரக்கு வாகனத்தை நிறுத்தி போதையில் படுத்துறங்கிய இளைஞரால் பரபரப்பு

மதுரை

மதுரை

மதுரையில் சாலையின் நடுவே சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, கால்களை வெளியில் நீட்டியவாறு போதையில் எல்லாம் மறந்து படுத்து உறங்கிய இளைஞரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Share this:
மதுரையில் சாலையின் நடுவே சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, கால்களை வெளியில் நீட்டியவாறு போதையில் எல்லாம் மறந்து படுத்து உறங்கிய இளைஞரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையின் பிரதான பகுதிகளில் ஒன்றான தமிழ் சங்கம் சாலை எப்போதும் கணிசமான வாகன போக்குவரத்து உள்ள இடம். நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் தமிழ் சங்கம் அருகே சரக்கு வாகனம் ஒன்று சாலையின் நடுவே வெகு நேரமாக நின்றுள்ளது. அதிலும், டிரைவர் சீட்டின் வெளியே இரண்டு கால்கள் மட்டும் நீட்டிக் கொண்டிருந்ததால் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் அச்சத்திற்கும், பதட்டத்திற்கும் உள்ளானார்கள்.

சில இளைஞர்கள் விளையாட்டாக, "என்னடா கால் மட்டும் வெளிய இருக்குது..." என்று கிண்டல் செய்தபடி அந்த காட்சியை மொபைல்களில் படம்பிடிக்க துவங்கினர். சில நிமிடங்களில் அந்த வழியாக பயணித்தவர்கள் அந்த வாகனத்தை சூழ துவங்கினர். அங்கு கூடியிருந்த பயணிகள், டிரைவர் சீட்டின் உள்ளே ஒரு இளைஞர் மட்டும் சுயநினைவு இல்லாமல் கால்களை வெளியே நீட்டியபடி படுத்திருந்ததை கவனித்து அவரை எழுப்ப பல்வேறு முயற்சிகள் செய்துள்ளனர்.

எதுவும் பலனளிக்காத நிலையில் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர். ஒரு காவலர் வந்து அவருக்கு உயிர் உள்ளதா என்பதை பரிசோதித்த பின்னர், அவர் போதையில் உறங்கி கொண்டிருப்பதை உறுதி செய்தார். பின்னர், அவரும் அந்த இளைஞரை எழுப்ப எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. கன்னத்தில் அறைந்தும், முகத்தில் தண்ணீர் தெளித்தும் கூட அவர் கண்களை திறக்கவில்லை.

இதையும் படிங்க: நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி எனக் கூறி முதியோர் அணியும் கண்ணாடியை விற்று மோசடி!


சரக்கு வாகனத்தில் இருந்த வாகன உரிமையாளர் எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, சம்பந்தப்பட்ட இளைஞர் எல்லீஸ் நகரை சேர்ந்த பிரகாஷ் (26) என்பதும், அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரை வடக்கு மாசி வீதியில் பார்சல் சர்வீஸ் நடத்தி வரும் சதீஷ் குமார் (35) என்பவரிடம் டிரைவராக வேலைக்கு சேர்ந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.மாலையில் ஒத்தக்கடை பகுதியில் சரக்கு ஏற்றி விட்டு சிம்மக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தவர் திடீரென அலைபேசி அழைப்புகளை எடுக்காததால் அவரும் பதற்றமாக இருந்துள்ளார். பிரகாஷின் நிலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உரிமையாளர் வாகனத்தின் உள்ளே இருந்து அவரை வெளியே இழுத்து போட்ட பிறகும் கூட அவர் கண் திறக்காமலேயே இருந்துள்ளார்.

மேலும் படிக்க: மயிலாடுதுறையில் 13வயது சிறுமி இறப்பில் மர்மம் விலகியது: காதலனே உடலுறவுக்கு பின் கொன்றது அம்பலம்...


அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல் நிலைய போலீசாரின் வாக்கி டாக்கி ஒலியை கேட்டு சட்டென கண் திறந்து பார்த்தார் அந்த மெய்மறந்த இளைஞர்.  விசாரணை நடத்திய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.ஆயுத பூஜை தினத்தில் வழக்கமாக வாழை இலை தோரணங்களுடன் மங்களகரமாக இருக்க வேண்டிய வாகனம், சாலையின் நடுவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, வெறும் கால்களுடன் நின்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகன நெருக்கடியும், பதட்டமான சூழலும் ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: