தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் விவகாரத்தில், ஒரு அமைச்சர் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தருகிறார் என்றும் ஒரு அமைச்சர் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று கூறுகிறார் என்றும் தெரிவித்த
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, இதில்
திமுக இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மாமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பட்டியலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி தேர்தலில் 70% அதிமுக வெற்றி பெற்று இருக்கும், இறுதி மூன்று நாட்களில் நிலைமை மாறிவிட்டது,
இல்லையென்றால், அதிமுக வரலாற்று வெற்றியை பெற்று இருக்கும்,
தலைவர் மற்றும் குழு தலைவர் தேர்தலில்அதிமுக சார்பாக போட்டியிட உள்ளனர் ,மாமன்றத்தில் உறுப்பினர்கள் செயல்பாடுகள் பார்த்து பணி நிரந்தரமாக இருக்கும் சரி இல்லாத பட்சத்தில் மாற்று நிர்வாகி தேர்வு செய்யப்படுவர். மாமன்றத்தில் மதுரை மக்களுக்கு தேவையான குரல் ஒலிக்க வேண்டும் என்று மாமன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், போக்குவரத்து துறை அமைச்சர் அனைத்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவு தருவதாக கூறினார். எனவே, திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. கேரளாவில் இன்று பொது பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை போல தமிழகத்திலும் பொது பந்த் அறிவித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சென்னை மேயர் பிரியா.. நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு சுற்றுப்பயணம் செய்தபோது திமுகவினர் அதனை விமர்சித்தனர். அப்போது, எடப்பாடி பழனிசாமி 36 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்தார். இன்று திமுக முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் முதலீடு பயணமா?? அவருடன் சென்ற இருக்கும் நபர்களை பார்த்தால் இன்ப சுற்றுலா போல தோன்றுகிறது என்று செல்லூர் ராஜூ விமர்சித்தார்.
செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.