சிறுநீரக நோய் சிகிச்சைக்காக நரிக்குறவர் இன பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கிய மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்.
மதுரை சக்கிமங்கலத்தில் வசிக்கும் நரிக்குறவ இனத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி ராசாத்திக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்வதற்காக முதலமைச்சர் காப்பீட்டு அட்டையை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்கள். அவ்வழியாக ஆய்வு சென்ற மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த மணிகண்டன் - ராசாத்தியிடம் அவர்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
ராசாத்தியின் பெயர் அவரது குடும்ப அட்டையிலும், முதலமைச்சர் காப்பீட்டு அட்டையிலும் இடம் பெறவில்லை என தெரியவந்தது. உடனே, கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாச்சியர் வரை அனைத்து அதிகாரிகளையும் உடனே வரவழைத்து ஆவணங்களை தயார் செய்து ஒரு மணி நேரத்துக்குள்ளாக குடும்ப அட்டை மற்றும் முதலமைச்சர் காப்பீட்டு அட்டை வழங்கினார்.
Also read... அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணான நெல் மூட்டைகள் - இழப்பீடு கோரி விவசாயிகள் கண்ணீர்
மேலும், நரிக்குறவ இனத்தை சேர்ந்த பிற 3 குடும்பங்களுக்கும் குடும்ப அட்டையும், ஒரு குடும்பத்துக்கு முதலமைச்சர் காப்பீட்டு அட்டையும் என 5 குடும்பங்களுக்கு அடையாள அட்டையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்த ஆட்சியர் அனீஷ் சேகரின் செயல் மற்ற அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai