முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதுரையில் பென்னிகுக் வாழ்ந்ததற்கான சாத்தியம் இல்லை- கலைஞர் நூலக இட சர்ச்சைக்கு ஆட்சியர் விளக்கம்

மதுரையில் பென்னிகுக் வாழ்ந்ததற்கான சாத்தியம் இல்லை- கலைஞர் நூலக இட சர்ச்சைக்கு ஆட்சியர் விளக்கம்

கலைஞர் நூலக விவகாரம்

கலைஞர் நூலக விவகாரம்

மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர்கள் குடியிருப்பு வளாகம் போதுமான வசதியுடன் இருந்ததால் அங்கு நூலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் கர்னல் பென்னிகுக் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் 70 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என கடந்த ஜூன் 3 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச தரத்தில் நவீன வசதிகளுடன், சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 மாடி கட்டிடமாக 6 லட்சம் புத்தகங்கள் வைக்கும் வகையில் கட்டப்பட உள்ளது.

Also Read: மதுரையின் முதல் ஒலிம்பிக் வீரர் திருஞானதுரை - கனன்று கொண்டிருக்கும் கனவின் கதை!

இந்த நூலகம் கட்ட மதுரையில் முதற்கட்டமாக மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் , மீனாட்சி கல்லூரி, எஸ்.எஸ்.காலனி ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். ஆனால், அந்த 7 இடங்களிலும் நூலகம் அமைப்பதற்கான சாத்தியங்கள் இல்லாததால், இரண்டாம் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர்கள் குடியிருப்பு வளாகம் போதுமான வசதியுடன் இருந்ததால் அங்கு நூலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுப்பணித்துறையின் வசமுள்ள அந்த இடத்தில், பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக் வாழ்ந்த வீடு உள்ளதாகவும், எனவே அதை இடித்து விட்டு அந்த வளாகத்தில் கலைஞர் நூலகம் கட்டக் கூடாது எனக்கூறி பெரியாறு - வைகை ஆயக்கட்டு பாசன விவசாயிகள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதற்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பதில் அளித்துள்ளார். அதில், கர்னல் பென்னிகுக் 15.01.1841 இல் பிறந்து, 09.03.1911 இல் இறந்துள்ளதாகவும், அதன் பின்னர் 1912 இல் பொதுப்பணித்துறை இடத்தில் பூமி பூஜை செய்யப்பட்டு 1913 இல் கட்டி முடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.எனவே, பென்னிகுக் மறைந்த பின்னர் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் அங்கு அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: DMK Karunanidhi, Madurai, Tamilnadu