Home /News /tamil-nadu /

நியூஸ் 18 செய்தி எதிரொலி - சாலைகளை சீரமைக்க மதுரை மாநகராட்சி நடவடிக்கை

நியூஸ் 18 செய்தி எதிரொலி - சாலைகளை சீரமைக்க மதுரை மாநகராட்சி நடவடிக்கை

அஷ்டமி சப்பர தேர் திருவிழா

அஷ்டமி சப்பர தேர் திருவிழா

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாநகரத்தில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் அஷ்டமி சப்பரம் பக்தர்களால் இழுத்த இடத்திலிருந்து நிற்காமல் இழுத்துச் செல்வது வழக்கம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர தேர் திருவிழாவின் போது பழுதடைந்த சாலைகளால் தேரை இழுக்க முடியாமல் பக்தர்கள் அவதிக்கு உள்ளானது குறித்து நேற்று செய்தி வெளியானது.

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் 'அஷ்டமி சப்பரம்' தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவழ வழக்கம். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம்.

இந்த தேரோட்டத்திற்காக மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு வெளி வீதியில் வலம் வந்தனர். இந்நிலையில், திருவிழா ஏற்பாடுகள் எல்லாம் சரியாக நடந்து வந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மதுரையின் ரோடுகளை முறையாக சீரமைக்காமல் இருந்தது மாநகராட்சி நிர்வாகத்தினர்.

இதனால் தேரோடும் அந்த மதுரையின் வெளி வீதிகள் முழுவதும் கரடு முரடாக இருந்ததால் அஷ்டமித் சப்பரத்தை பக்தர்கள் இழுக்க முடியாமல் இழுத்து வந்த காட்சி மதுரை மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.

Must Read : மதுரையில் பிறந்து 6 நாட்களே ஆன பெண் சிசு படுகொலை? போலீசார் தீவிர விசாரணை

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாநகரத்தில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் அஷ்டமி சப்பரம் பக்தர்களால் இழுத்த இடத்திலிருந்து நிற்காமல் இழுத்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை சாலைகள் முழுவதும் பெயர்ந்து கிடந்ததால் ஆங்காங்கு நின்று பக்தர்கள் இழுக்க முடியாமல் இழுத்துச் சென்றனர்.

 





குறித்து நேற்று நியூஸ் 18 செய்தி வெளியிட்டிருந்தது, அதன் எதிரொலியாக, "நீண்ட நாட்களாக பழுதடைந்திருக்கும் அனைத்து சாலைகளையும் சீரமைக்க அரசால் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் பணிகள் துவங்கப் பட்டுள்ளதாகவும், 3 மாதங்களில் அனைத்து முக்கிய சாலைகளும் படிப்படியாக சீரமைக்கப்படும்" என்றும் மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Madurai, Madurai corporation

அடுத்த செய்தி