மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மையத்தில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை -ஆட்சியர் மகிழ்ச்சி

தடுப்பூசிப் பணியை பார்வையிடும் ஆட்சியர்

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் செயல்படும் தடுப்பூசி மையத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 8,14,156 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதில், அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள இளங்கோ மாநகராட்சி பள்ளியில், அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் செயல்படும் மையத்தில் 2021 ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது. இங்கு மட்டும் இதுவரை மொத்தம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில், 69,087 கோவிஷீல்டு ஊசிகளும், 30,929 கோவாக்ஸின் ஊசிகளும் செலுத்தப்பட்டு உள்ளன.

1 லட்சமாவது நபருக்கு செலுத்தப்பட்ட ஊசியை பார்வையிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், இந்த சாதனைக்கு காரணமாக அரசு மருத்துவமனை டீன், மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், "தமிழகத்திலேயே முதன் முறையாக அதிகபட்சமாக 1 லட்சம் நபர்களுக்கு இங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்ததும், கூட்டத்தை தவிர்க்க உருவாக்கப்பட்ட முன்பதிவு நடைமுறையும் இந்த சாதனைக்கு காரணம்" என்றார்.

அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் பேசுகையில்,
"கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணிகளால் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளோம்.
இந்த மையத்தில் ஊசி செலுத்திய 1 லட்சம் நபரில் இதுவரை யாருக்கும் எந்த வித மருத்துவ சிக்கல்களும் ஏற்பட்டதே இல்லை.
முன்பதிவு நடைமுறையின் காரணமாக சமூக இடைவெளியுடன், நிதானமாக அதிக மக்களுக்கு ஊசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
மக்கள் அனைவரையும் சகித்துக் கொண்டு பொறுப்புடன் செயல்பட்ட பேராசிரியர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கனவே, கொரோனா பரிசோதனை பணிகளில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 17 லட்சம் பரிசோதனைகளை செய்து சாதனை படைத்த பெருமையும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Karthick S
First published: