மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் (PM KISAN) கீழ் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வரவு வைக்கப்பட்டுவருகிறது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் இதுவரை 10 முறை விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
எனவே, மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் விவசாயிகள் தங்களின் ஆதார் விவரங்களை pmkisan.tn.gov.in என்ற இணையதளத்தில் புதுப்பிக்கவும் மற்றும் தங்களின் பி.எம் - கிசான் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை 31-3-2022-க்குள் தவறாது இணைத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.