மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் தள்ளு உண்டியலில் குவிந்த காணிக்கை.. எவ்வளவு தெரியுமா?
மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் தள்ளு உண்டியலில் குவிந்த காணிக்கை.. எவ்வளவு தெரியுமா?
தள்ளு உண்டியல்கள் திறப்பு
மதுரை சித்திரை திருவிழாவிற்காக கள்ளழகருடன் கொண்டு செல்லப்பட்ட தள்ளு உண்டியல்கள் திறப்பு - பக்தர்களிடமிருந்து ரூபாய் 75 இலட்சமும், 10 கிராம் தங்கம், 347 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளன.
மதுரை சித்திரை திருவிழாவிற்காக கள்ளழகருடன் கொண்டு செல்லப்பட்ட தள்ளு உண்டியல்கள் எண்ணப்பட்டதில் பக்தர்களிடமிருந்து ரூபாய் 75 இலட்சமும், 10 கிராம் தங்கம், 347 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி அழகர்மலையை விட்டு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்பாடாகி, தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வில் கலந்து கொண்டு மீண்டும் அழகர்மலைக்கு 20 ஆம் தேதி வந்தடைந்தார்.
கள்ளழகருடன் பாரம்பரிய முறைப்படி, மாட்டுவண்டி மற்றும் தள்ளு வண்டியில் 39 தற்காலிக காணிக்கை உண்டியல்கள் வலம் வந்தன. அதில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய 20 உண்டியல்கள், முதற்கட்டமாக ஆலயத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கோயில் உதவி ஆணையர் அனிதா தலைமையில் திறக்கப்பட்டு எண்ணும் பணியானது துவங்கி நடைபெற்றது.
திருக்கோவில் ஊழியர்கள், பக்தர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் உண்டியலில் காணிக்கையாக கிடைக்கப்பெற்ற பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட நிலையில், உண்டியல் காணிக்கையாக ரூபாய் 77 இலட்சத்து 11 ஆயிரத்து 574 ரூபாயும், 10 கிராம் 100 மில்லி தங்கமும், 347 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து பக்தர்களிடமிருந்து காணிக்கையாக கிடைக்கப்பெற்ற ரூபாய் மற்றும் தங்கம் ஆகியவை திருக்கோயில் நிர்வாக பதிவேட்டில் வரவு வைக்கப்பட்டன.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.