பண்பாட்டின் தலைநகரம்
மதுரையில் 16 நாட்கள் நடைபெறும் சித்திரைப் பெருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக கற்பக விருட்சம் வாகனத்தில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரரும், சிம்மம் வாகனத்தில் மீனாட்சியும் நான்கு மாசி வீதிகளிலும் வீதி உலா வந்தனர்.
சித்திரைப் பெருவிழாவின் இரண்டாம் நாளில் காலை தங்க சப்பரத்தில் சுவாமியும் அம்மனும் வீதியுலா சென்ற நிலையில், மாலையில் பூதம் - அன்னம் வாகனத்தில் நான்கு மாசி வீதிகளிலும் உலா வந்தனர்.
நான்கு மாசி வீதிகளின் இரு புறமும் திரளான மக்கள் திரண்டு மக்கள் சுவாமி ஊர்வலத்தின் முன்பாக மீனாட்சி, கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் சென்ற குழந்தைகளையும் ரசித்தும், நாட்டுப்புறக் கலை ஆட்டங்களில் பங்கேற்றும், மேள தாள கொண்டாடத்துடன் உற்சாகத்துடன் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்கேற்க இயலாமல், இந்த ஆண்டு மீண்டும் பங்கேற்றுள்ள மக்கள் திரளால் எப்போதும் இல்லாத அளவிலான சமூக புத்துணர்வை சித்திரை திருவிழா காட்சிகள் பிரதிபலித்து வருகின்றன.
Must Read : மேலப்பாகனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம்..
இதே போன்று தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்வுகளும், அதனை தொடர்ந்து ஏப்ரல் 12 ஆம் தேதி பட்டாபிஷேகமும், 13 ஆம் தேதி திக் விஜயமும், 14 ஆம் தேதி திருக்கல்யாணமும், 15 ஆம் தேதி தேரோட்டமும், 16 ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.